Tuesday, December 31, 2013

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



விடிய விடிய புத்தாண்டு கொண்டாடிட்டு விடிந்ததும் 

குப்புறப்படுத்து தூங்குபவர்களுக்கும்,

இரவெல்லாம் தூங்கிவிட்டு விடிந்ததும்
புத்தாண்டு கொண்டாடுபவர்களுக்கும்,

புத்தாண்டை சாக்காக வைத்து வயிறுமுட்ட குடித்து
வாந்தி எடுத்தவர்களுக்கும்,

தான் மாறாமல் புத்தாண்டு என்பது இன்பத்தை 

கொடுக்கும் மந்திரமாக கருதும் மாந்தர்களுக்கும்,

எதையுமே கண்டுகாம வழக்கமான நாள் போல 

வேலையில் மூழ்கி இருக்கும் கர்மவீரர்களுக்கும்,

புத்தாண்டை பயன்படுத்தி கோடிகளை குவிக்கும் 

கார்பிரேட் நிறுவனங்களுக்கும்,

................என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


போராட்டம்

அதர்மத்திற்கு  எதிராக  தர்மமும்,
போலிக்கு  எதிராக  உண்மையும்,
அநீதிக்கு எதிராக நீதியும்,
கெட்டஎண்ணங்களுக்கு எதிராக  நல்லஎண்ணங்களும்,
அழிவு அறிவியலுக்கு  எதிராக  ஆக்க அறிவியலும்,
அடக்குபவனுக்கு எதிராக அடிமையும்,
தாழ்குணத்துக்கு எதிராக உயர்குணமும்,
செயற்கைக்கு எதிராக  இயற்கையும்,
தீயவர்களுக்கு  எதிராக  நல்லவர்களும்,..........போராடும் போராட்டத்தில் ஆயுதம் எடுக்காமல்,
இன்னும்,அகிம்சையை பின்பற்றிக்கொண்டு இருந்தால் !
இருக்கிற கொஞ்சமும் அழிவது உறுதி.

Saturday, December 14, 2013

பகுத்தறிவு பகலவர்கள்

வரும்காலங்களில்..............

நிர்வாணமா தெருக்களில் நடந்து போனாலும்,
மனித கழிவை தின்றாலும்,
பொது இடங்களில் உடலுறவு கொண்டாலும்,
தாயும் மகனும் உடலுறவு கொண்டாலும்,
இது போன்ற,
கேடுகெட்ட செயலுக்கு கூட தனி மனித சுதந்திரம் என்று
வக்காலத்து வாங்குபவர்கள் போல,,,,,,,
இன்று,ஓரின சேர்க்கைக்கு ஆதரவு தெரிவிக்கும்
பகுத்தறிவு பகலவர்களை மாதிரி.

Thursday, December 12, 2013

வளர்ச்சி இல்லை



நாம் ஒருபோதும் புதியதாகப் படைப்பதில்லை,
இருப்பவற்றை இடமாற்றி வைக்கிறோம்.


புதியதாக நமக்கு எதுவும் கிடைக்காது.
பொருளின் அமைப்பு நிலையைத்தான் மாற்ற முடியும்,


இதைத்தான் அறிவியலும்,தொழில்நுட்பமும்
செய்துகொண்டு இருக்கின்றன.


இதனால் மனித சமூகத்தின் இயக்கம் தான் அதிகரித்துள்ளது
வளர்ச்சி இல்லை.

Wednesday, December 11, 2013

அறிவிலிகள்

விளையட்டு என்றால்: கிரிக்கெட் 

வரலாறு என்றால்: சினிமா நடிகர்களின் வரலாறு 

அறிவியல் என்றால்: டிவி விளம்பரத்தில் வருவது 

அரசியல் என்றால்: அரசியல்வாதிகளை பற்றிய செய்தி 

பாமரர்களின் தலைவன்: சினிமா நடிகன் 

படித்தவர்களின் தலைவன்: கிரிக்கெட் வீரர்

நாட்டுபற்று என்றால்: தேசிய கொடிய உடம்பில் வரைந்து கொள்வது

அன்பு என்றால்: விலை உயர்ந்த பொருளை வாங்கி கொடுப்பது

சுகம் அனுபவிப்பது என்றால்: மது அருந்துவது

பண்டிகை கொண்டாட்டம் என்றால்: சினிமா பார்ப்பது 


------இப்படி இன்னும் பலவற்றை சொல்லல்லாம்.

இன்றைய இளைஞர்களை சிந்திக்க விடாமல் சிதைக்க செய்கின்றன,
விபசார ஊடங்களும் ........
சுயநல தலைவர்களும் ..........

Saturday, November 9, 2013

தொலைத்தல்



வாழ்க்கைக்காக பணத்தை தொலைக்கலாம்
பணத்துக்காக வாழ்க்கையை தொலைக்க கூடாது,

சிலபேர்,
பணத்தை தொலைத்தால் தான்
வசதியை பெருக்க முடியுது.....

பலபேர்,
வாழ்கையை தொலைத்தால் தான்
வயிறு நிரப்ப முடியுது......


Sunday, October 6, 2013

வருங்கால சந்ததியே


தொழில்கல்வி படித்தவர்களும், 
ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும்,
கலை&அறிவியல் படித்தவர்களும், 
இப்படி லட்சகணக்கான இளைஞர்களுக்கு 
TET,TNPSC,SSC,RRBஎன்று அரசும்,
IT,MNC,CIVIL,AUTOMOBILE என்று தனியாரும், 
வெறும் 40% வேலைவாய்ப்பு தான் மீதம் உள்ள 60% இளைஞர்கள் படுபாடு யார் அறிவர்,

அவர்களை வாழவைக்ககூடிய.
அரசும் ,
முந்தைய தலைமுறையும்,
இந்த சமூகமும்,
இன்றைய கல்விமுறையும்,
அவர்களை
மனநோயாளியாகவும்
தற்கொலை செய்துகொள்பவர்களாகவும். மாற்றி உள்ளது.

பத்தாவது படித்தவன் எதாவது ஒரு தொழில் செய்து லட்சாதிபதியாக இருக்கான்,
பட்டப்படிப்பு படித்தவன் பரதேசியாக இருக்கிறான்,ஏனெனில் இந்த சமூகம் இவனக்கு படித்தவன் என்ற பட்டம் கொடுத்து பைதியகரனாக மாற்றி வைத்துள்ளது.

லட்சகணக்கான இளைஞர்ககள் இவர்கள் செய்த ஒரே தவறு எதற்கும் உதவாத ஏட்டுகல்வியை கற்றதுதான்.
நமது
கல்விமுறையும்,
அரசும்,
அமைதியான முறையில்
வருங்கால சந்ததியே முடவர்களாக மாற்றிக்கொண்டு இருக்கிறது என்பது மட்டும் உண்மை..

வேட்டை சமூகம்

மனிதனை மனிதன் அடித்து வாழும் 
வேட்டை குணம் கொண்ட மனிதன் தான் இன்று, 
திறமை,
வீரம், 
வெற்றி பெற்றவன், 
என்றெல்லாம் அளவிடப்படுகிறது. 
இன்னும், 
முதலாளித்துவம் என்னும் வேட்டை சமூகத்தில் தான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் மிருகங்களை விட மோசமாக....

உழைப்பை சுரண்டல்

பண்டமாற்று முறையில் இருந்து,
நாணய முறை தோன்றிய அடுத்த நொடி..... 
ஊழலும்,
உழைப்பை சுரண்டலும்,
தோன்றிவிட்டது.

Thursday, October 3, 2013

மனித வாழ்க்கை

நாகரீகம் அடைந்தும் 
நாடோடிகளாக, 

அனைவரும் இருந்தும் 
அனாதைகளாக, 

அறிவியல் வளர்ந்தும் 
ஆடுமந்தைகளாக,

மகிழ்ச்சி அடைந்தும் 
மனநோயாளிகளாக,  

பணம் சம்பாதித்தும் 
பரதேசிகளாக,   

உரிமை இருந்தும் 
ஒடுக்கப்பட்டவர்களாக,

இப்படி
நவீன ஏகாதிபத்தியத்தில்  
நாற்றமடிக்கும் மனித வாழ்க்கை 

Saturday, September 28, 2013

மக்களின் குணம்



அன்று,உறவுகளோடு இருந்த "இனிமை"
இன்று,கொடுமையாக இருக்கிறது.

அன்று,கொடுமையாக இருந்த "தனிமை"
இன்று,இனிமையாக இருக்கிறது.

சூழ்நிலையை பொறுத்தே அமைகிறது சாதாரண மக்களின் குணம்,
சில அதிகாரம் படைத்தவர்களின் குணத்தை பொறுத்தே அமைகிறது சூழ்நிலை.

அறிவியல் வளர்ச்சி



பயன்படுத்த முடியாதபடி நீரை மாசுபடுத்தி
சுத்திகரிக்கும் எந்திரத்தை கண்டுபிடிப்பதுதான்,
                                                             -அறிவியல் வளர்ச்சியா ?

எந்த உணவு பொருட்களும் விளையாதபடி நிலத்தை மாற்றி
மரபணுமாற்று பயிர்களை கண்டுபிடிப்பதுதான்,
                                                             -அறிவியல் வளர்ச்சியா?

புவி வெப்பநிலை அதிகரிக்கும் அளவு காற்றை மாசுபடுத்தி வெள்ளத்தடுப்பு,வறட்சிநிவாரண முறைகளை கண்டுபிடிப்பதுதான்,
                                                            -அறிவியல் வளர்ச்சியா?

இப்படி வளர்ச்சி என்றபெயரில்
அறிவியலை மறுசுழற்சி இல்லாமல் பயன்படுத்துவதால்
மனித இனம் மறுமலர்ச்சி இல்லாமல் மாண்டு போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.








Tuesday, September 3, 2013

வெற்றி

"வெற்றி" என்ற சொல் சிலரை செதுக்கி,பலரை சிதைக்கிறது.

100பேரில் 3பேர் வெற்றிபெற்றான் என்பது
அவர்களின் அறிவால் அல்ல
மீதம் உள்ள 97பேரின் அறியாமையால்.

ஏனெனில்,

அறிவை அளவிட முடியாது
ஒப்பிட்டு தான் அறியமுடியும்

பொருளாதார முன்னேற்றமாம்



அன்று, பலர் உயர் தியாகம் செய்து வெளியேற்றிய வெள்ளையனை,

இன்று புதிய பொருளாதார கொள்கையால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.

அது,விடுதலை போராட்டமாம்.

இது,பொருளாதார முன்னேற்றமாம்.

Tuesday, August 20, 2013

இந்திய அரசின் சாதனைகள்


1.நீர் விஷமாக மாறி போனது. 
2.விளைநிலம் விளையாநிலமனது. 
3.60 வையத்துக்கு மேல் வரகூடிய நோய் இன்று 
   20வையதுக்குள். 
4.கல்வி,வேலைவாய்பு என்ற பெயரில் பலபேரை 
   கார்பிரேட்களுக்கு அடிமையாக்குவது.
5.கூட்டுகுடும்பம்,தனிக்குடும்பம்,என்பதெல்லாம் மாறி 
   தனித்தனி நாகரீக அனாதைகளாக அலைவது.
6.இன்று 60% பெண்களுக்கு கரு தரிப்பது கடினமாக உள்ளது. 
7.குழந்தைகளும்,முதியவர்களும்,இல்லங்களில் இருந்து 
   விடுதிக்கு மாறிவிட்டன.
8.மக்களின் மனதில் சுயநலத்தை உண்டாக்கி அவர்களுக்கு
   உள்ளயே அடித்துக்கொள்வது.
9.அனைவரையும் கடன்கரர்களாக காட்சியளிப்பது.
10.நாட்டையே தனியார் நிறுவனங்களுக்கு விற்பது.

இது தான் 60 வருசமா,
பல ஐந்தாண்டு திட்டங்கள்,

பசுமை புரட்சி திட்டங்கள், மற்றும் 
புதிய பொருளாதார கொள்கைகளின் சாதனைகள்.

Tuesday, August 6, 2013

பாசனத்திட்டங்கள்




மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை.அடுத்து,நாப்பது வருசமா ஆட்சி செய்த பண்ணாடைங்க அத பாரமரிக்க கூட துப்பு இல்ல இன்னும் எங்க புதுசா கட்டறது.ஒன்னு மட்டும் செஞ்சி இருகாங்க "இலவச"த்தின் பேரில் பலரை
பிச்சைக்காரர்களாக
மாற்றி இருகாங்க

Tuesday, April 23, 2013

விட்டுக்கொடுக்க மாட்டோம்



அயலாரிடம் அடிமையா இருந்தாலும் இருப்போம், 

அருகில் உள்ளோரிடம் விட்டுக்கொடுக்க மாட்டோம். 

இதில், 

தனி மனிதன்,குடும்பம்,ஊர்,நாடு,எந்த வகையா இருந்தாலும்.

Monday, April 22, 2013

சாதி ஒழிப்பு

சாதி ஒழிப்பிறக்காக பாடுபடும் தன்னலமற்ற தலைவர்களிடம் சில கேள்விகள்,

1.மற்ற மாணவர்களுக்கு இணையான திறமை,தாழ்த்தப்பட்ட மாணவர்களும் பெறமுடியாதா ?

2.இடஒதுக்கீடு இல்லாமல் போட்டிப் போட முடியாதா ?

3.சுகாதாரத்தில் மற்றவர்களை விட மேன்மையா இருக்க முடியாதா?

4.கொலை,கொள்ளை,கற்பழிப்பு,போன்ற செயலை செய்யாமல் மற்ற சாதிகளுக்கு முன்னோடியா இருக்கமுடியாதா ?

5.நல்ல பண்புகளை மற்ற சாதிகளுக்கும் கற்று தரும் அளவுக்கு பண்பட்டவர்களாக இருக்க முடியாதா ?

6.இப்படி தாழ்த்தப்பட்ட மக்களிடையே அடிப்படை விசயங்களை தரம் உயர்த்தாத அரசு பள்ளிகள், சுகாதார மையங்கள் எதற்கு?

7.அரசின் ஆயிரம் திட்டங்கள் எதற்கு?

பிச்சைகாரர்களை உருவாக்கினால் தான் வள்ளல்கள் உருவாக முடியும்,அதுபோல்தான் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தால் தான் தலைவர்களும் உருவாக முடியும்,அரசியல் செய்ய முடியும்.

இதனால் தான் அவர்களை மேம்பட்டவர்களாக மாற்றாமல் என்றும் அடிமட்டத்திலே வைத்திருக்க எத்தனை இலவசங்கள்,எத்தனை அரசு சலுகைகள்,எத்தனை இடஒதுக்கீடுகள்,எத்தனை நடிப்புகள்.

Thursday, April 18, 2013

பாவப்பட்டவன்

ஒருவனை குற்றவாளி ஆக்குவதும் சூழ்நிலை தான்,
அவனை தண்டிப்பதும் சூழ்நிலை தான்,
இதில் 
பாவப்பட்டவன், 
பகுத்தறிவில்லா மனிதன் தான்.

Saturday, April 6, 2013

எண்ணங்களின் பதிவு

நமக்கு தெரியாமலே
நமது எண்ணங்களை பதிவுசெய்து கொண்டிருகிறது மரபணு,
அடுத்த தலைமுறைகாக 

நாம் பொருள் சேர்த்து கொண்டிருக்கிறோம் 
மனம் நிறைய குப்பையை வைத்து கொண்டு,

Friday, April 5, 2013

சிறு வயதில்


சிறு வயதில்,,,,,,,,,,,,,,,,,
ஊர் தெருமுனையில்,
தோட்டத்தில்,
ஆற்றுஒரத்தில்,
ஒண்டி மரத்தடியில்,
வயல் காட்டில்,  
கோவிலில்,
நண்பர்களுடன் விளையாடிய போது, எங்காவது நடக்கும்
திருமண விழா,பண்டிகை,மஞ்சள் நீராட்டு விழா,அங்கிருந்து வரும் காற்றோடுகலந்த இளையராஜா இசை
மனதுக்கு இன்பமாக !
பெற்றோர்களின் குறும்பு தனத்தை கண்டுகாமல் !
நண்பர்களுடன் உற்சாக விளையாட்டில் தளைத்த
என் மனது !
இன்று மில் இளையராஜா இசை கேட்கும்போது
கனத்த மனுதுடன் கேள்வி கேட்கிறது,
எங்கே போயிட்டு இருக்கிறாய் என்று ?
இது தான் வளர்ச்சியா என்று ?

விவசாயி தற்கொலை



நாளை விவசாயி எங்களுக்கு எந்த ஆடம்பர பொருளும் வேணா,

அரசின் பொய் சலுகைகள் வேணா,

எந்த இலவசங்களும் வேணா,

இவ்வளோ நாள் தேசத்திற்காக உணவு செய்ததெல்லாம் போதும்,

இனி நான் எனக்கு மட்டும் செய்வேன் என்று சொன்னால்???

ஒரு பையல் உசுரோட இருக்க மாட்டன்,விவசாயை தவிர



நமது பெற்றோர்கள் உயிர் விட்டது போதும்,

ஆசைக்கு அடிபணியாமல்,

நுகர்வு கலச்சாரத்தில் நுழையாமல்

விவசாயத்தை மீட்டு தன்மானமுடன் வாழுவோம்

வாங்க வருங்கால தலைமுறையே

Thursday, April 4, 2013

வெகுதூரத்தில்.

இயற்கையை விட்டு விலகி 
செயற்கையில் குடிபுகுபவர்களுக்கு 
தற்காலிக சுகம் இருக்கலாம் 
பிற்காலத்தில் சுமை இருமடங்கு 
இன்று,
எல்லோரும் இயற்கையை விட்டு விலகி வெகுதூரத்தில்....................................

இனிமையானது

கணவன்,மணைவி 
ஆளுகொரு கார்பிரேட் கம்பெனியில் 
உடல் சுகத்துடன்,மன சுமையுடன் இருப்பதை விட 
இருவரும், 
ஒரே கழனியில் உடல் உழைப்புடன்,மன மகிழச்சியுடன் வாழ்வது 
எவ்வளோ இனிமையானது,

Wednesday, April 3, 2013

காற்று

காசு இல்லாம கிடைக்கிறது 
காற்று மட்டும் தான்,
அதுவும் விலை போய்ச்சனா ! ! !
அதிகாரம் படைத்தவர்களும், 
செல்வ சீமான்களும்,
80வருட வாழ்க்கைக்கு 
800வருடத்துக்கு தேவையான காற்றை
அடைத்து வைத்து கொண்டு
அடித்தட்டு மக்கள் அனைவரையும்
அழித்திருப்பார்கள்,
ஆண்டவனுக்கு தான் நன்றி சொல்லணும்
காற்றை இலவசமா தந்ததுக்கு

Friday, March 29, 2013

மிருகங்கள் சிரிக்கிறது

சுயநலமா இருப்பது, 
விட்டுகொடுகாதது ,
பொறாமைபடுவது,
மறுகணம் தவறாக நினைப்பது,
சந்தேகப்படுவது,
நம்பிக்கை இல்லாதது,
ஏமாற்றுவது, 
சண்டை போடுவது,
கொள்ளை அடிப்பது, 
கொலைசெய்வது ,
அடிமை படுத்துவது,
துன்புறுத்துவது ,
போன்ற அனைத்தையும் வீட்டுக்குள்ளே வைத்துக்கொண்டு

மனிதர்கள் என்றும்
ஆறறிவு படைத்தவர்கள் என்றும்

கூறுவதை கேட்டு
மிருகங்கள் சிரிக்கிறது

மக்களின் வெகுளித்தனம்

அறிவியல்,வரலாறு,மொழி,கலாச்சாரம் ,பண்பாடு,போன்ற 
அனைத்தும், 80% தமிழக மக்களுக்கு கற்றுக்கொடுப்பது 
சினிமா மற்றும் டிவி தான்,

இது சினிமாவின் வெற்றி என்பதா? 
இல்லை 
மக்களின் வெகுளித்தனம் என்பதா?

Wednesday, March 27, 2013

நாய் பொழப்பு



அடிமையா இருக்கனும்,
சுயநலமா இருக்கனும்,
ஏதாவது ஒரு வழியில் பணம் சம்பாதிக்கனும்,
எந்திரம் போல வேலை செய்யனும்,
போலியாய் நடிக்கனும்,
சகமனிதர்களை ஏமாற்றனும்,
ஆடம்பர பொருட்களின் மோகத்தில் மூல்கனும்,
நவீன நாகரிக நாடோடிகளாக இருக்கனும்,
அனைவரும் பொறாமைபடும்படி இருக்கனும்-இதில்

எதுவும் இல்லாதவனை - சமூகம்
சாட்டையில் அடிக்கிறது !
தனிமை படுத்துகிறது !
ஒதுங்கி போனாலும் உதைகிறது !
மனநோயாளியா மாற்றுகிறது !
குடும்பம் இல்லை !
பெற்றோரே புறம் தள்ளும் போது மணைவி எப்படி கிடைபால் !

மேலே கூறிய நற்குணங்கள்
இல்லாத இளைஞர்களுக்கு இவுலகம் இல்லை

கீதை,குரான்,பைபிள் சொன்னது
திருவள்ளுவர் சொன்னார்
காந்தியடிகள் சொன்னார்
ஔவையார் சொன்னார்
அவன் சொன்னான் இவன் சொன்னான்-னு
எவனாவது போனிங்க சோத்துக்கு வழியில்லாம
தெருதெருவா அலையவேண்டியதுதான்.

Friday, March 22, 2013

சிந்தனை துளி


"நம் மனதை நோகடிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் 
நம் எண்ணங்களில் உருவாகி
மற்றவர்கள் மூலமா நம்மை தாக்குகிறது 
அதனால் 
நல்வழிபடுத்துவது 
நமது எண்ணங்களையும், மனதையும் தான்,
அடுத்தவர்களை அல்ல"

"சுயநல சூழ்நிலையில் 
நாமும் சுயநலமா இருந்தாதான் 
சோறு கிடைக்கும் போல"

அண்ணன் என்னடா ! 
தம்பி என்னடா ! 
அவரசமான உலகத்திளே !-70களில் 
பெத்தவங்க என்னடா ! 
பிள்ளையங்க என்னடா ! 
கார்பிரேட் உலகத்திளே ! -இன்று

"உடல் பலவீனமும்"
"மன அழுத்தமும்" - தான் 
வளர்ந்துள்ளது நமது பொருளாதார வளர்ச்சியில்

ஊராரிடம் நல்ல பேர்வாங்க 
உனது வாழ்கையை பணையம் வைக்காதே
கஷ்டப்படுவது நீதான்,ஊரார் இல்லை

அன்பானவர்களிடம் அதிகம் எதிர்பார்கதே 
குறைவது அன்பாக இருந்தாலும் 
விலகுவது நீயாகத்தான் இருப்பாய்

கடந்தகால இன்பங்களின் 
நினைவுகள் தான் உருமாறுகிறது 
நிகழ்காலத்தில் ஆனந்த கண்ணீராக

என்று உடல் உழைப்பு குறைந்ததோ 
அன்றே மன உழைப்பு வளர தொடங்கிவிட்டது

தேவை அதிகமாகி போயிடுச்சி
வாழ்க்கை தொலைஞ்சி போயிடுச்சி

எந்திரங்களோடு பழகிய மனிதன் உறவுகளையும் 
எந்திரமாய் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைகிறான்.

ஒரு இடத்தில் தேவைக்கு அதிகமாகவும் 
ஒரு இடத்தில் தேவைக்கு குறைவாகவும்
இருப்பது இயற்கையாய் உருவான பொருள் மட்டுமல்ல 
மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளும் தான்


Tuesday, March 19, 2013

முதல் வணக்கம்

எனது தமிழ் மாணவர்களிடம் உள்ள
அறிவும்,
வீரமும்,
விடாமுயற்சியும்,
கொண்டு உலகத்தையே வெல்லலாம்,
அனால்
மானம் கெட்ட அரசியல்வாதிகளாலும்,
தரங்கெட்ட கல்வி முறையாலும்,
தனியார் நிறுவனங்களின் வியாபார பொருளாக மாறிய கல்வியாலும்,
சுயநலம் கொண்டு காசு சம்பாதிக்கும் அரசு ஆசிரியர்களாலும்,
ஊரை ஏமாற்றும் ஊடகங்களாலும்,
ஏமாற்ற பட்டு திசை தெரியாமல் இருந்தவர்கள்,
வழிநடத்த ஆளில்லாமல் விழித்தவர்கள்,
இன்று
தகவல் தொழில்நுட்பத்தின் பலனாக
தன் சுய முயற்சியினால் அவர்களாகவே அறிவு ஆயுதம் ஏந்தி
தளபதி இல்லாத போர்வீரர்களை போல்
போராடும் மாணவர்களை
வாழ்த்துவதை விட
வணங்குவதே மேல்,

Sunday, March 17, 2013

அகத்தால் அடிமைகள்

நவீன ஏகாதிபத்தியத்தில்
நாம் எல்லாம்

நாகரிக நாடோடிகள்,
அகத்தால் அடிமைகள்,
பந்த பாசம் அற்ற பரதேசிகள்,

எல்லாற்றையும் விட
எதையும் சிந்திக்காத கற்சிலைகள்

Thursday, March 14, 2013

என்ன செய்ய????

மாணவர்கள் போராட்டத்துக்கு
நேரில் சென்று
ஆதரவு கொடுக்கலாம்,
ஊக்குவிக்கலாம்,
அவர்களுடன் போராடலாம்,
வழிகாட்டலாம்,
இன்னும்,
எத்தனையோ சமுக சீர்கேடுகளுக்காக இதேபோல் போராடலாம்,
அரசியல்வாதிகளின் முகமூடிகளை அகற்றலாம்,

என்ன செய்ய????
வார ஒருநாள் விடுமுறைக்கு
அடுத்த வாரத்திற்கு ஆயுத்தம் ஆகா நேரம் பத்தாது ,

ஒருநாள் விடுப்பு எடுத்தால் சம்பளம் இல்லை,

வாரம் ஆறு நாட்களும் தன்னை பற்றிகூட யோசிக்க முடியாது,

தூக்கம்,சாப்பாடு,உடை,கழிப்பறை,அனைத்தும் அவர்கள் கண்காணிப்பில்,

பெத்தவங்க உசுரு போற நிலைமையில் இருந்தாகூட அனுமதி பெற்று வரவேண்டும்,

கணினி கூட சில நேரங்களில் நமது ஆணையை மீறும்,
நாம் மீற முடியாது அவர்களின் ஆணைக்கு.

அன்பு,பாசம்,குடும்பம், எல்லாம் நேரங்கள் ஒதுக்கப்பட்டு,நிமிடங்களில் நடக்கிறது,

பெற்றோர்,பிள்ளைகளை விடுதிகள் விழுங்குகின்றன,

இவற்றை எல்லாம் சாதாரணமா எடுத்துக்கொண்ட மனங்களும் இருக்கின்றன,

என்ன செய்ய????

விவசாயத்தை பெருக்கலாம்,
சில்லறை வணிகத்தை அதிகரிக்கலாம்,
கூட்டுறவு சந்தை அதிகபடுத்தலாம்,
குடிசை தொழில் பெருக்கலாம்,
உண்மையான கல்வி கொடுக்கலாம்,
கிராமத்தை வளர்ச்சி அடைய செய்யலாம்,
அந்த அந்த துறையில் ஆராய்ச்சி அதிகபடுத்தலாம்,

இவற்றை எல்லாம் விடுத்தது,

பன்னாட்டு நிறுவனங்களை கொண்டு வந்து
பாதாளத்தில் தள்ளிவிடார்களே
படுபாவி அரசியல்வாதிகள்,

எல்லோரும் எந்திரங்களாக மாறிவிடார்களே!
என்ன செய்ய????

Tuesday, March 12, 2013

நோக்கும் நுட்பம்



அடுத்தவன் பிரச்னையை தொலைநோக்கி மூலம் பார்கிறோம்,
நமது பிரச்னையை நுண்நோக்கி மூலம் பார்கிறோம்,
அதனால் தான்.
அடுத்தவன் துன்பத்துக்கு ஆறுதல் கூறுகிறோம்,
நமது துன்பத்துக்கு ஆறுதல் தேடுகிறோம் ,
பார்க்கும் கருவியை மாற்றி பயன்படுத்திப்பார்
நாமும் துன்பப்படமாட்டோம்.
அடுத்தவர்களும் துன்பப்படமாட்டார்கள்.

Monday, March 11, 2013

போலிகளின் ஆட்சி

உண்மையை ஏற்றுகொள்ள முடியாத,
உண்மையை சகித்துக்கொள்ள முடியாத,
மனங்களை கொண்ட சூழ்நிலையில்,
போலிகள் தான் ஆட்சி செய்யும்,
அழிவுக்கு தான் வழிவகுக்கும்

Sunday, March 3, 2013

தாய் உணர்வு





தனது குடும்பம்,தனது ஊர்,
தனது மாநிலம்,தனது நாடு,
தனது மொழி,தனது இனம்,
தனது தொழில்,தனது பண்பாடு,
தனது கலாச்சாரம்,
இவற்றை எல்லாம்
கேவலமா நினைத்து
அடுத்தவர்களுடையதை பெருமையா நினைக்கும் வரை நாம் தோற்கடிக்கப்பட்டவர்களே!,

அதுவும் அடுத்தவர்களிடம் அடைக்கலம் புகுபவர்கள் உயிருடன் நடமாடினாலும் உயிரற்றவர்களே!
தனதையும் பெருமையா நினைத்து,

அடுத்தவர்களுடையதையும் மதித்து,
அவர்களுக்கு இணையா தனதையும் தரம் உயர்த்தி,
வாழ்பவனே!!!!
"உண்மையான வெற்றி அடைந்தவன்".

ஆனால்,
உணர்வற்ற உருவங்கள்தான் இன்று அதிகம் உலா வருகின்றன.