Thursday, March 14, 2013

என்ன செய்ய????

மாணவர்கள் போராட்டத்துக்கு
நேரில் சென்று
ஆதரவு கொடுக்கலாம்,
ஊக்குவிக்கலாம்,
அவர்களுடன் போராடலாம்,
வழிகாட்டலாம்,
இன்னும்,
எத்தனையோ சமுக சீர்கேடுகளுக்காக இதேபோல் போராடலாம்,
அரசியல்வாதிகளின் முகமூடிகளை அகற்றலாம்,

என்ன செய்ய????
வார ஒருநாள் விடுமுறைக்கு
அடுத்த வாரத்திற்கு ஆயுத்தம் ஆகா நேரம் பத்தாது ,

ஒருநாள் விடுப்பு எடுத்தால் சம்பளம் இல்லை,

வாரம் ஆறு நாட்களும் தன்னை பற்றிகூட யோசிக்க முடியாது,

தூக்கம்,சாப்பாடு,உடை,கழிப்பறை,அனைத்தும் அவர்கள் கண்காணிப்பில்,

பெத்தவங்க உசுரு போற நிலைமையில் இருந்தாகூட அனுமதி பெற்று வரவேண்டும்,

கணினி கூட சில நேரங்களில் நமது ஆணையை மீறும்,
நாம் மீற முடியாது அவர்களின் ஆணைக்கு.

அன்பு,பாசம்,குடும்பம், எல்லாம் நேரங்கள் ஒதுக்கப்பட்டு,நிமிடங்களில் நடக்கிறது,

பெற்றோர்,பிள்ளைகளை விடுதிகள் விழுங்குகின்றன,

இவற்றை எல்லாம் சாதாரணமா எடுத்துக்கொண்ட மனங்களும் இருக்கின்றன,

என்ன செய்ய????

விவசாயத்தை பெருக்கலாம்,
சில்லறை வணிகத்தை அதிகரிக்கலாம்,
கூட்டுறவு சந்தை அதிகபடுத்தலாம்,
குடிசை தொழில் பெருக்கலாம்,
உண்மையான கல்வி கொடுக்கலாம்,
கிராமத்தை வளர்ச்சி அடைய செய்யலாம்,
அந்த அந்த துறையில் ஆராய்ச்சி அதிகபடுத்தலாம்,

இவற்றை எல்லாம் விடுத்தது,

பன்னாட்டு நிறுவனங்களை கொண்டு வந்து
பாதாளத்தில் தள்ளிவிடார்களே
படுபாவி அரசியல்வாதிகள்,

எல்லோரும் எந்திரங்களாக மாறிவிடார்களே!
என்ன செய்ய????

No comments:

Post a Comment