Friday, February 24, 2012

பகைவனானேன்,எனக்கு நானே

--> -->

மனித சமுதாயத்தை கருவறுக்க,
மனிதனால் கண்டெடுக்கப்பட்ட,
எந்திரங்களில் ஒன்று,
என் கையில் இன்று.

அனைவரையும் சுட்டு வீழ்த்த,
ஆணையிடுகிறது பணம்.
அது ஜெயிக்க கூடாது என,
அமைதியுடன் கூறுகிறது என் மனம்.

பணத்தின் அரசாட்சியில்,
பகைவனானேன்,எனக்கு நானே......

Monday, February 6, 2012

எங்கே போகிறோம் நாம்


வாழ்க்கை பாதையில்,
ஓட நினைத்து,
ஒதுங்க மறந்த - மனதை,
பற்றி கொண்ட பரபரப்பு,
உறக்கத்திலும் உயிருடன் உள்ளது.

உறவுகளையும் !
உடன் வந்தவர்களையும் !
பார்க்காமல் பரபரப்பு - என்னும்,
கடிவாளத்துடன் கடக்கிறது - பாதையை.

பணத்தில் புதைந்து போன - பாசம்.
அகத்தில் அழிந்து போன - அன்பு.
எல்லாம் கடமையாக காட்சியளிகின்றது.

எதற்கும் நேரம் இல்லாமல்,
எங்கே போகிறோம் நாம் ,,,,,,,,