இந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பண்பட்டவர்களாக இருந்தால் தான் அந்த சமூகம் ஒரு பண்பட்ட சமூகமாக இருக்கும்.ஆனால் சமூகத்தில் பண்படாதவர்களும், சமூகத்தில் சீர்கேடுகளை உண்டாக்குபவர்களும் தான் கீழ்மட்டவர்களாக கருதப்படுவார்கள். இதில் ஜாதி பாகுபாடுகள் இல்லை. இந்த நிலை மாறி அனைவரும் பண்பட்டவர்களாக இருந்தால் தான் அந்த சமூகம் பண்படும். இப்படி ஒரு பண்பட்ட சமூகம் வேண்டுமெனில் அது கல்வியால் மட்டுமே முடியும்.'கல்வி' என்பது இன்று இருக்கிற பணியாளர்களை உருவாக்கும் கல்வி இல்லை.இப்படி கீழ்மட்டவர்களை உண்மையான கல்வியின் மூலம் பண்பட்டவர்களாக மாற்றி ஒரு பண்பட்ட சமூகத்தை,சமநிலை சமூகத்தை,உண்டாக்குபவர்கள் தான் உண்மையான தலைவர்கள்.அனால் இன்று உள்ள தலைவர்களோ பண்பட்டவர்களையும் கீழ்மட்டவர்களாக மாற்றி ஒரு சீர்கெட்ட சமநிலை சமூகத்தை உருவாக்குகிறார்கள்,சமூகத்தில் சீர்கேடுகளை உருவாக்குபவர்களை ஆதரிகிறார்கள்,இதை தான் கீழ்மட்டவர்களுக்காக போராடுகிறோம் என்கிறார்கள்,
Thursday, December 27, 2012
Friday, November 9, 2012
என் சிந்தனைத் துளிகள்
"சீர்கெட்ட சூழ்நிலையில் நல்ல பெயர் வாங்க மூயற்ச்சிக்காதே -நீயும் சீர்கெட்டு போவாய்"
"ஒருவன் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க முடியாது-ஏனெனில் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை"
"பராமரிக்கப்படவில்லை எனில்-அறிவு கூட பொட்டல்காடு தான்"
"நன்னெறிகள் சமாதி ஆனது,,,,,,,,
குற்றங்கள் சாதாரணமா ஆனது"
"நாட்டை சுரண்டுபவர்களிடத்தில் கடனாளியாக, நகரத்து அகதிகளாக, வேறு மாநிலத்தில் அடிமைகளாக, அல்லது சொந்த நிலத்தில் சமாதியாக. இந்திய விவசாயிகள்"
"காதல் அசாத்தியமானது, புத்திசாலிகள் பெரும்வீர்கள் பணக்காரர்கள் என எவரும் அதற்கு ஒரு பொருட்டே இல்லை"
"என்னாதான் தெளிவான மனதை வைத்திருந்தாலும் காலம் ஒருநாள் கலக்கி மீன் பிடிப்பதை கட்டுபடுத்த முடியவில்லை"
"முதலாளித்துவம் என்பது நிலை மாறும் வருணாசிரம தர்மமா? இல்லை
நவீன வருணாசிரம தர்மமா?"
"சந்தேகம் என்பது ஒரு சனியன்,அதை உள்ளே அனுமதித்தால் சந்தோசம் என்பது வெளியே போய்விடும்"
"விட்டுக்கொடுப்பதில் கூட தணிகை தேவை.
யாருக்கு? எதற்கு? என்று"
"தீய எண்ணம் உள்ளவனின் மன வலிமை நல்ல எண்ணம் உள்ளவனின் மன வலிமையை விட குறைவு போல! இதனால் தான் அதிகமானோர் தீய எண்ணங்களால் பாதிகபடுகிரர்களா?"
"அன்று, மனிதன் பணத்தால் சாப்பிட்டான்.....
இன்று,பணம் மனிதனை சாப்பிடுகிறது....."
"ஆண்களைக் கவரும் விசயத்திலிருந்து பெண்கள் விடுதலையாவதுதான் அவளின் சுதந்திரத்திற்கான முதல் நிபந்தனை"
"மன உழைப்பை விட உடல் உழைப்பு அதிகம்-அன்று
உடல் உழைப்பை விட மன உழைப்பு அதிகம்-இன்று"
"கேட்டவன் தன் செயலை நியாயப்படுத்துகிறான்,
நல்லவன் தன் செயலை சந்தேகப்படுகிறான்"
"குழந்தைகளுக்கு 'அன்பை' கொடுக்க கற்றுகொடுங்கள்
எதிர்பார்க்க கற்றுகொடுகாதீர்-அது
ஏமாற்றத்தையும், சுயநலத்தையும், வளர்க்கும்"
"மரபணு என்னும் மரத்தில் நாம் எல்லாம் இலைகள் போல் உதிர்வதும்,,,, துளிர்வதுமாய்,,,,"
"இந்த உலகில் மிகப்பெரிய சாதனை "உண்மையாய் இருப்பது"
""அலங்காரம்" பகுத்தறிவைவே அசைத்து பார்க்கிறது. போலிகள் அணிந்து கொண்டிருப்பதால்"
"அறியாமையை பரப்ப ஆயிரம் பேர் உள்ளனர்,அறிவை பரப்ப ஆறு பேர் கூட இல்லை"
"தீயவர்களிடமிருந்து தன்னை பாதுகாக்க கையில் கேடயம் தான் வேண்டும்.ஏனெனில் வால் அவர்களை போல் தீயவர்களாகிவிடும்"
"ஏவியவனை பாதுகாத்து, அம்புக்கு தண்டனை கொடுக்கும், நமது நீதி,
ஏனெனில்-இது வேடர்களின் ஆட்சி
எப்பொழுதும் வீழ்வது பொது மக்களே!"
"மற்றவர்களை பார்த்து நமது தவறை திருத்தி கொள்பவனே-அறிவாளி,
அவர்களை போலவே மாறுகிறவர்கள்-முட்டாள்"
"ஒருவரின் பல வகையான முகங்களையும் சலனம் இல்லாமல், சலிக்காமல், பார்த்துகொண்டு இருக்கிறது கணினி திரை"
"தன் குடும்பம் உயிர் பிளைக்க - சில வசதி படைத்தவர்களின் சுக வாழ்க்கைக்காக
உயிர் கொடுத்து உழைக்கும் - பலர்"
"அத்தியாவசிய பொருட்களுக்காக முழுவாழ்க்கையையே அடகு வைக்கும் மக்களின் உயிரையும் பறிக்க தயங்குவதில்லை சனநாயக முகமூடிக்குள் முதலாளித்துவம்"
"தனி உடமை சமுதாயத்தின் ஆணி வேர் "சுயநலம்""
"சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு,
இது வரை உள்நாட்டு கொள்ளையரிடம் ஏமாந்தோம்,
இனி வெளிநாட்டு கொள்ளையரிடம் ஏமாறப்போறோம். - விவசாயி"
"விட்டுகொடுக்கும் மனம் இருந்தால் பிடித்தவர்களிடம் பிரச்சனையை பேசி தீர், இல்லை எனில் பேசாமல் தீர்"
"என்னதான் தெளிவான மனித அறிவு இருந்தாலும்,
எல்லோருக்கும் அடிக்கடி வந்து விடுகிறது, நம் முன்னோர்களின்(குரங்கு)அறிவு"
"தான் செய்யும் தப்பை தட்டிகொடுத்து,
அடுத்தவன் செய்யும் தவறை, ஆராய்ச்சி பன்னுகிறது "மனது"
"இந்த உலகில் உண்மை எதுவென்று ஆராய்வதர்க்குள் ஆயுசு முடிஞ்சுடும் போல!!! அந்த அளவுக்கு போலிகள் ஆதிக்கம் செலுத்துகிறது"
"நிகழ்கால வாழ்கையில் பிரச்சனையை உருவாக்குவது அறிவியல்,
நிகழ்கால வாழ்கையில் பிரச்சனையை தீர்க்க விடை கொடுப்பது வரலாறு,
வளர்சிக்கு அறிவியல் வளபடுத்த வரலாறு"
"ஒரு தனி மனிதன்(அல்லது) ஒரு நிறுவனம், பல பேரின் சுதந்திரத்தை பரிப்பதுதான் தனி மனித சுதந்திரம் என்கிறது ஜனநாயகம்"
"அறிவியல்,தொழில்நுட்பம்,கல்வி,நன்னெறி,ஒழுக்கம்,உறவு,அனைத்தும் மக்களை ஏமாற்றும் கருவிகளாக உருமாற்றப்பட்டுள்ளன"
"இன்று பல பேர், முதலாளித்துவம் உருவாக்கிய சாக்கடையில் மூழ்கி உள்ளோம்,மூழ்கியவருக்கு எப்படி தெரியும் அதன் நாற்றம்"
"கண் இமைக்கும் நேரத்தில் கோடிகளை குவிபவர்களும்,நூறு ரூபாய்க்கு கண் இமை மூடாமல் உழைபவர்களும்,இந்த சமூகத்தில் தான் இருகிறார்கள்"
"சுயமரியாதை சுயரூபம் எடுக்கிறது,
விட்டுகொடுக்கும் மனம் விடைபெறுகிறது,
உறவுகள் உதிர்ந்துகொண்டு இருக்கிறது,
எல்லாம் இயல்பாய் நடக்கிறது"
"உழைக்கும் வர்கங்களின் அறிவை மட்டுபடுத்தும் கருவியா மாற்றப்பட்டுள்ளது கார்பிரடே கையில் உள்ள அறிவியல்"
"சமூகத்தை கட்டிகாப்பதும்,வளர்ச்சி அடையச்செய்வதும் தான்-"அரசியல்"
இது -"சாக்கடை அல்ல"
கட்சிகளும் ,கட்சி தலைவர்களும், கழகங்களும் தான் -"சாக்கடை "
இது -"அரசியல் அல்ல""
Wednesday, October 24, 2012
அந்த இன்பம் இன்று வராது
அவரை தோப்பில்
காடை முட்டை தேடன காலம்,
காராமணி பரிச்சி தின்ன காலம்,
சிட்டு குருவி கூட்டை தேடன காலம்,
அடுத்தவன் கொல்லைல வேர்கடலை திருடின காலம்,
நண்பர்களுடன் ரகசிய கூட்டம் போட்ட காலம்,
இன்னும் எத்தனையோ!
இன்று,
ஸ்பெக்ட்ரம் ஊழல்
நிலகரி ஊழல்
காமன்வெல்த் ஊழல்
கிரைனட் ஊழல்
போன்ற மொத்த பணத்தையும் கொடுத்தால் கூட
அந்த இன்பம் இன்று வராது
Thursday, September 27, 2012
Saturday, September 22, 2012
Thursday, September 13, 2012
Wednesday, September 12, 2012
உழைக்கும் பலர்
இன்று
நாம் சாபிட்ட சாப்பாட்டுக்கு
பின்னாடி
எத்தனை பேர்
உழைப்பு,
வியர்வை..........இருக்கு,
என்பதை நினைக்க கூட மனதில் இடம் இல்லாமல்
அடைத்து கொண்டிருகிறது பணம்.
எத்தனை பேர்
உழைப்பு,
வியர்வை..........இருக்கு,
என்பதை நினைக்க கூட மனதில் இடம் இல்லாமல்
அடைத்து கொண்டிருகிறது பணம்.
இதில் தீபாவளி கொண்டாட்டத்தில்
பட்டாசு தையாரிபவர்களை பற்றி எப்படி நினைப்போம்.
தன் குடும்பம் உயிர் பிளைக்க - சில
வசதி படைத்தவர்களின் சுக வாழ்க்கைக்காக
உயிர் கொடுத்து உழைக்கும் - பலர்.
Saturday, September 1, 2012
Thursday, August 30, 2012
Wednesday, August 29, 2012
எனது சமூகம்
நகரத்தில் உள்ள இளைஞர்களின் வாழ்க்கை இன்னும் சுதந்திரம் அடையாமல் அடிமைபட்டுகொண்டிருகிறது முதலாளிகளிடமும், அதிகாரவர்கமிடமும், வாடகை வீட்டில் தான் தங்க வேண்டும்,அந்த வீட்டின் முதலாளி விதிக்கும் கட்டுபாடுகள் கொஞ்சம் இல்ல,சாப்பிடுவது முதல் கழிப்பறை செல்வது வரை.சத்தமாக சிரித்து பேசக்கூடாது,நண்பர்கள் வரக்கூடாது,இரவு 9மணிக்கு மேல் வரக்கூடாது இதற்கு பயந்தே ஊரில் இருந்துநள்ளிரவில் வந்தாலும் பேருந்து நிலையத்திலே தங்கி விடிந்ததும் வருகிறார்கள், வயிற்றுக்கு இல்லைஎன்றாலும் வாடகை கொடுக்க வேண்டும்,இப்படி எல்லாம் இருந்தால் தான் இருக்க முடியும்.இல்லை எனில் வீடு காலி பண்ணவேண்டும்.வேலை செய்யும் நிறுவனத்தில் அதைவிட மேல் அங்கு மனிதர்களாக இருக்ககூடாது எந்திரமாக இருக்கவேண்டும் அவர்கள் இடும் கட்டளைகளை அப்படியே செய்ய வேண்டும் அதுதான் ஒழுக்கம்,கொடுக்கும்கூலியை வாங்கிக்கொள்ள வேண்டும் அதுதான் அடக்கம்,தவறு அவர்கள் மேல் இருந்தாலும் நாம் எதுவும் கேட்கக்கூடாது அதுதான் நேர்மை,நமது சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து நிறுவனத்துக்கு நமது வாழ்கையை அற்பணிக்க வேண்டும் அதுதான் உண்மை,இப்படி அனைத்து நல்ல குணங்கள் இருந்தால் தான் வேலை,சம்பளம்.இல்லை எனில் வேலை விட்டு நீக்கிவிடுவார்கள்.
ஏற்றுமதி நிறுவனங்கள்,கார்மெண்ட்ஸ் மற்றும் பெரிய வணிகவலாகங்களில் பணிப்புரியும் பெண்களின் கஷ்டங்கள் எண்ணிலடங்காது,8மணி நேரம் ஓய்வே இல்லாமல் வேலைசெய்ய வேண்டும்,மரபணுவில் மாற்றம் ஏற்படும் அளவுக்கு முதலாளியை கண்டால் பயம்,கண்ணீர் சிந்துவதற்கு கூட கண நேரம் தான்,நம் நாட்டில் ஆயுள் கைதி அனுபவிக்கும் துன்பத்தை விட இவர்களின் துன்பம் அதிகம்,இவர்களை பற்றி சொல்ல இன்னொரு கட்டுரை வேண்டும்.இத்தகைய பெண்கள் நவீன கொத்தடிமைகள்.
அடுத்து சாப்பாடு, ரூமில் மண்ணெண்ணெய் அடுப்பு அல்லது மின்சார அடுப்பு இவற்றை கொண்டு,ஏதோ ஒரு பொருளை வேகவைத்து ருசிக்காக உண்ணாமல் பசிக்காக உண்டு வாழ்கிறார்கள்.ஹோட்டலுக்கு போனால் பணத்தை பிடுங்கி விடுவார்கள்,அப்புறம் அடுத்த நாள் சாப்பிட முடியாது.தினமும் காலை வேளையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில் இந்த சாப்பாட்டையும் சாப்பிட நேரம் இல்லாமல் கடமைக்கும் உண்ணுகிறார்கள். அதிலும் சிலர் காலை உணவே உண்ணுவது இல்லை.
தினமும் வேலை முடிந்து இரவு நேரத்தில் தான் பெற்றோர்களிடத்தில் போன் பேசமுடியும் அதிக நேர வேலை என்றால் அதுவும் இல்லை ஞாயிற்று கிழமையில் தான். தனக்கு எதாவது உடல் நலம் சரியில்லை என்றாலும் கவனிக்க யாரும் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் இருப்பார்கள்.நண்பர்கள் கவனித்து கொள்வார்கள் இருந்தாலும்,அவர்களும் வேளைக்கு செல்லவேண்டும்.இறுதியில் தனியாக தான் சுதாரித்துக்கொல்ல வேண்டும்.இதே கதி தான் ஊரில் உள்ள பெற்றோர்களுக்கும்.சில மாதத்திற்கு ஒருமுறை அல்லது பண்டிகை காலங்களில் தான் ஊருக்கு போவார்கள் ஏனெனில் அப்பொழுது தான் மூன்று,நான்கு, நாள் விடுமுறை கிடைக்கும்.ஊரில் உள்ள பெற்றோர்,தம்பி,தங்கை,மனைவி இவர்களுக்கு புதிய துணிமணிகளை எடுத்துக்கொண்டு போவார்கள்,அங்கு அவர்களும் ஆசையுடன் காத்திருப்பார்கள்.இது போன்று அனைவரும் ஒரே நேரத்தில் செல்வதால் போதிய பேருந்து,ரயில்,வசதி இல்லாததால் பலர் கூட்டத்தில் இடம் கிடைக்காமல் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும்,ஊரில் உள்ளவரின் ஏக்கத்திலும்,எதிர்பார்ப்பிலுமே,அடுத்த நாள் பண்டிகை முடிந்துவிடும்.இன்னும் சிலர் ரயிலின் கழிவறை மற்றும் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டும்.பஸ்சில் கூட்ட நெரிசலில் கால் முட்டிஎலும்புகள் மறுத்துக்கொண்டு நின்று செல்லவேண்டும்.பின் இரண்டொரு நாளில் திரும்ப வரவேண்டும் இல்லை எனில் சம்பளம் பிடித்துகொள்வார்கள்.வரும்பொழுது பெற்றோர்கள், பிள்ளைகள், இருவரின் மனதிலும் பிரிவு,அன்பு,பாசம்,அனைத்தும் ரணங்களாக மாறி மறுத்து போகிறது மனங்கள்.
அடுத்து அரசு,விவசாயம்,சுயதொழில்,கால்நடை வளர்ப்பு,சில்லறை வணிகம்,சிறுதொழில்,போன்றவற்றை நவீன படுத்தி,மேம்படுத்தி,படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தாமல்,இருக்கிற அரசுதுறைகளையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள துறைக்கு பணியாளர் தேர்வு என்று சொல்லி அலைய விடுகிறார்கள் இளைஞர்களை கூட்டம்கூட்டமாக . 2000பேர் தேவை என்றால் 1000000பேர் விண்ணப்பம் போடுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட 2000பேரை சொல்லி மீதி உள்ள 998000பேரின் நிலைமையை மறைத்து பழியையும் அவர்கள் மேலேயே போட்டுக்கொள்ளும்படி ஒரு தந்திரத்தை கையாளுகிறது தனியார் மையமாக்கப்பட்ட அரசு துறை.இத்தகைய இளைஞர்களின் வாழ்க்கை அரசு வேலைக்கு காத்திருப்பதிலேயே முடிந்து விடுகிறது.இவர்களை வைத்து,பயிற்சி மையங்கள் என்றும், பயிற்சி புத்தகங்கள் என்றும்,பணம் சம்பாதிக்கும் கூட்டம் வேறு.இப்படி அரசு வேலைக்காக அனைத்தையும் இழந்து வறுமையில் வாடுகின்றனர்.எத்தனையோ திறமைகள் இருந்தும் அரசு வேலை தான் உயர்வு என்று எண்ணி அத்தனையும் அடிப்பட்டு போகிறது.இது கிராமத்தில்தான் அதிகம்.
அடுத்து வறுமை கோட்டுக்கு கீழுள்ளவர்களின் நிலை இதை விட பரிதாபம்.கிராமத்தில் இருக்கிற சொற்ப நிலம்,வீடு,இவற்றை விற்றுவிட்டு நகரத்திற்கு பிழைக்கபோய் அங்கு படும் அல்லல்கள் கொஞ்சநஞ்சம் இல்ல.தங்க இடம் இல்லாமல் எதாவது ஒரு நடைமேடையில் விளம்பர பேனர்களில் கூடாரம் அமைத்து கொண்டும்,சாக்கடை போன்ற ஒதுக்குபுறத்தில் குடிசை போட்டுக்கொண்டும் வாழ்கிறார்கள்.வசதி படைத்த வள்ளல்களின் பழைய துணி தான் இவர்களின் உடை,குப்பையில் போடுவதிருக்கு முந்திய நிலை உள்ளது தான் இவர்களின் உணவு.வருமானத்திற்கு,பெண்கள் அருகில் உள்ள,தன் சுய வேலையை செய்வதற்கு கூட சோம்பல்படும் பணம் வைத்திருப்போர் வீடுகளில் வேலை செய்வார்கள்.ஆண்கள்,கட்டிட வேலை,குப்பை அள்ளுதல்,சுமை தூக்குதல்,மனித கழிவு செல்லும் குழாய் மற்றும் தொட்டிகளை சீர் செய்தல்,போன்ற வேலைகளை செய்கின்றனர்.இவர்களின் குழந்தைகளும் இதேகதிதான்.இது போன்றவர்களுக்கு கிராமம்,நகரம் இரண்டும் சொந்தம் இல்லை,
சொந்த நாட்டிலே அகதிகளாக வாழ்கிறார்கள்.இப்படியும் வாழ விடுவதில்லை ஆளும் வர்க்கங்களும்,வசதிபடைத்தவர்களும்.ஒதுக்கு புறத்தில் தங்கி இருந்தாலும் ஆயிரெத்தெட்டு முறை அவர்களின் குடிசைகளுக்கு தீ வைத்து துரத்துகிறார்கள் மற்றும் அடிமை படுத்துகிறார்கள்.
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வராத ஏழை மக்கள் விவசாய வேலைகளை செய்தோ,குத்தகை முறையில் விவசாயம் செய்தோ,தரமான உணவு உண்டு,உழைத்து ஆரோகியமாக வாழ்ந்து வந்தார்கள்.ஆனால் இன்று மத்தியஅரசின் 100நாள் வேலை திட்டத்தின் மூலம் வறுமையை போக்குகிறோம் என்று உழைக்காமல் சோம்பேறிகளாக மாற்றப்பட்டும்,மாநில அரசு 1ரூபாய்க்கு கெட்டுபோன அரிசியை கொடுத்து மற்ற பொருட்களை வாங்க முடியாத விலைக்கு கொண்டுபோய் நோயாளியாக மாற்றப்பட்டும்,
"உயிர் காப்பிடு" என்ற திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளை சம்பாதிக்க வைத்துள்ளனர்.இதுபோக கையில் இருக்கிற அஞ்சி பத்தையும் டிவி,செல்போன்,மூலம் போலி ஆசை ஏற்படுத்தி கார்பிரெட் நிறுவனங்கள் பிடுங்கி கொள்கிறார்கள்.இன்னும் பல ஆண்களின் உழைப்பில் முக்கால்வாசி டாஸ்மார்க்கில் வீணாகிறது,முதலில் கஷ்டத்துக்கு குடிக்க பழகி பின் பைத்தியமாக மாறுகிறது.
ஆட்சியில் இருப்பவர்கள் இவர்களை கண்டுகொள்வதே இல்லை,ஆனாலும் ஆட்சியில் அமர்வதற்கு அதிக எண்ணிகையில் இருக்கும் இவர்களின் ஒட்டு தேவை,இதனால் தான் தேர்தல் சமயத்தில் மட்டும் கீழ்மட்டத்தில் உள்ளவர்களை கவருவதர்க்காக அத்தனை நாடகங்களும் நடத்துகிறார்கள்.தமிழ்நாடாவது பரவாயில்லை எவ்வளவு அல்லல்பட்டாலும் குடும்ப உறவுகள் களைவது குறைவாய் உள்ளது வட இந்தியர்கள் பாதிபேர் ஏழைகள்தான் அவர்களுக்கு குடும்பம்,உறவுகள்,அன்பு,ஆதரவு,போன்ற எதுவும் இல்லை சாப்பாடு போட்டால் போதும் எல்லா வேலைகளும் செய்வார்கள்.இன்று சென்னை,கோவை,போன்ற தமிழக பெருநகரங்களில் ஓட்டல்கள்,கட்டி வேலைகள்,மேம்பால பணிகள்,போன்றவற்றில் அவர்கள்தான் வேலை செய்கிறார்கள்.
இவ்வாறு வறுமை,பயம்,பசி,அடிமை தனம்,தாழ்வு மனப்பான்மை, போன்றவற்றால் இவர்களுக்கு குடும்பம், திருமணம், குழந்தை, பாசம், அன்பு, எல்லாம் வெறுத்துபோய் மறுத்துபோன மனமாக,சிதைக்கப்பட்ட மனிதனாக வயிற்று பிழைப்புக்காக மட்டும் வாழ்கிறார்கள்.தனிமையில் மனித குணங்கள் இல்லாமல் எந்திரம் அல்லது மிருகம் போல் வாழ்கிறார்கள். இப்படி தான் அடிமை வர்க்கம் வளர்க்கப்படுகிறது
இதற்கெல்லாம் கரணம் யார்?
இந்தியர்கள் அனைவரிடமும் பரவி இருந்த பொருளாதாரத்தை மேற்கத்திய கலாச்சாரப்படி உலக மையம்,தாரள மையம்,தனியார் மையம்,போன்ற பொருளாதார கொள்கையின் மூலம் அனைத்தையும் ஒரு சிலரிடத்தில் குவித்து மற்ற அனைவரையும் தொழிலாளர்களாக மாற்றி,நுகர்வு கலாச்சாரத்தை ஏற்படுத்தி தவிக்கவிட்டு,நாட்டின் அடிப்படையான விவசாயம்,கல்வி,சுகாதாரம்,போன்ற அனைத்தையும் தனியார் மையமாக்கிய பொருளாதார மேதைகளின் அறிவாற்றல் தான் .உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போது,இந்தியாவில் பதிப்பு இல்லாமல் இருந்ததற்கு அவர்களின் பொருளாதார கொள்கை இல்லை,அவர்களின் கொள்கையாலும் மாறாத பலரின்,நமது கலாசார,குடும்ப பொருளாதாரத்தால் தான் என்று எப்படி தெரியும்.மேலைநாட்டு முறையில் பொருளாதாரம் படித்த தலைவர்களுக்கு.
சொந்த நாட்டிலே அகதிகளாக வாழ்கிறார்கள்.இப்படியும் வாழ விடுவதில்லை ஆளும் வர்க்கங்களும்,வசதிபடைத்தவர்களும்.ஒதுக்கு புறத்தில் தங்கி இருந்தாலும் ஆயிரெத்தெட்டு முறை அவர்களின் குடிசைகளுக்கு தீ வைத்து துரத்துகிறார்கள் மற்றும் அடிமை படுத்துகிறார்கள்.
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வராத ஏழை மக்கள் விவசாய வேலைகளை செய்தோ,குத்தகை முறையில் விவசாயம் செய்தோ,தரமான உணவு உண்டு,உழைத்து ஆரோகியமாக வாழ்ந்து வந்தார்கள்.ஆனால் இன்று மத்தியஅரசின் 100நாள் வேலை திட்டத்தின் மூலம் வறுமையை போக்குகிறோம் என்று உழைக்காமல் சோம்பேறிகளாக மாற்றப்பட்டும்,மாநில அரசு 1ரூபாய்க்கு கெட்டுபோன அரிசியை கொடுத்து மற்ற பொருட்களை வாங்க முடியாத விலைக்கு கொண்டுபோய் நோயாளியாக மாற்றப்பட்டும்,
"உயிர் காப்பிடு" என்ற திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளை சம்பாதிக்க வைத்துள்ளனர்.இதுபோக கையில் இருக்கிற அஞ்சி பத்தையும் டிவி,செல்போன்,மூலம் போலி ஆசை ஏற்படுத்தி கார்பிரெட் நிறுவனங்கள் பிடுங்கி கொள்கிறார்கள்.இன்னும் பல ஆண்களின் உழைப்பில் முக்கால்வாசி டாஸ்மார்க்கில் வீணாகிறது,முதலில் கஷ்டத்துக்கு குடிக்க பழகி பின் பைத்தியமாக மாறுகிறது.
ஆட்சியில் இருப்பவர்கள் இவர்களை கண்டுகொள்வதே இல்லை,ஆனாலும் ஆட்சியில் அமர்வதற்கு அதிக எண்ணிகையில் இருக்கும் இவர்களின் ஒட்டு தேவை,இதனால் தான் தேர்தல் சமயத்தில் மட்டும் கீழ்மட்டத்தில் உள்ளவர்களை கவருவதர்க்காக அத்தனை நாடகங்களும் நடத்துகிறார்கள்.தமிழ்நாடாவது பரவாயில்லை எவ்வளவு அல்லல்பட்டாலும் குடும்ப உறவுகள் களைவது குறைவாய் உள்ளது வட இந்தியர்கள் பாதிபேர் ஏழைகள்தான் அவர்களுக்கு குடும்பம்,உறவுகள்,அன்பு,ஆதரவு,போன்ற எதுவும் இல்லை சாப்பாடு போட்டால் போதும் எல்லா வேலைகளும் செய்வார்கள்.இன்று சென்னை,கோவை,போன்ற தமிழக பெருநகரங்களில் ஓட்டல்கள்,கட்டி வேலைகள்,மேம்பால பணிகள்,போன்றவற்றில் அவர்கள்தான் வேலை செய்கிறார்கள்.
இவ்வாறு வறுமை,பயம்,பசி,அடிமை தனம்,தாழ்வு மனப்பான்மை, போன்றவற்றால் இவர்களுக்கு குடும்பம், திருமணம், குழந்தை, பாசம், அன்பு, எல்லாம் வெறுத்துபோய் மறுத்துபோன மனமாக,சிதைக்கப்பட்ட மனிதனாக வயிற்று பிழைப்புக்காக மட்டும் வாழ்கிறார்கள்.தனிமையில் மனித குணங்கள் இல்லாமல் எந்திரம் அல்லது மிருகம் போல் வாழ்கிறார்கள். இப்படி தான் அடிமை வர்க்கம் வளர்க்கப்படுகிறது
இதற்கெல்லாம் கரணம் யார்?
இந்தியர்கள் அனைவரிடமும் பரவி இருந்த பொருளாதாரத்தை மேற்கத்திய கலாச்சாரப்படி உலக மையம்,தாரள மையம்,தனியார் மையம்,போன்ற பொருளாதார கொள்கையின் மூலம் அனைத்தையும் ஒரு சிலரிடத்தில் குவித்து மற்ற அனைவரையும் தொழிலாளர்களாக மாற்றி,நுகர்வு கலாச்சாரத்தை ஏற்படுத்தி தவிக்கவிட்டு,நாட்டின் அடிப்படையான விவசாயம்,கல்வி,சுகாதாரம்,போன்ற அனைத்தையும் தனியார் மையமாக்கிய பொருளாதார மேதைகளின் அறிவாற்றல் தான் .உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போது,இந்தியாவில் பதிப்பு இல்லாமல் இருந்ததற்கு அவர்களின் பொருளாதார கொள்கை இல்லை,அவர்களின் கொள்கையாலும் மாறாத பலரின்,நமது கலாசார,குடும்ப பொருளாதாரத்தால் தான் என்று எப்படி தெரியும்.மேலைநாட்டு முறையில் பொருளாதாரம் படித்த தலைவர்களுக்கு.
இவற்றை எல்லாம் மாற்ற இளைஞர்களால் தான் முடியும்,அனால் இன்று உள்ள இளைஞர்களிடையே சுயநலத்தை உண்டாக்கி தன்னை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டு,பொதுநல சிந்தனை இல்லாமலும்,ஒன்று சேரமுடியாமலும்,மாற்றி வைத்து உள்ளனர்.இதையும் மீறி சிந்திப்பவர்களை அடுத்த வேலை சாப்பாடு கிடைக்காமல்,அடிமட்ட நிலைக்கு செல்ல வேண்டும் என்று நவீன கணக்கீடுகள் வகுத்துள்ளனர்.இப்படி பிரித்தாளும் கொள்கை மூலம் தான் முதலாளி வர்க்கம் நமது உழைப்பில் வாழ முடியும்.எனவே சிந்தியுங்கள் இளைஞர்களே!,நாம் அனைவரும் சமுகம் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கப்பலை பற்றியும் சிந்திக்காமல் தன்னை பற்றி மட்டும் சுயநலத்துடன் சிந்தித்து கொண்டிருந்தால், கப்பல் செல்லும் திசை தெரியாமல்,முட்டி மோதி மூழ்கினால் அழிவது கப்பல் அல்ல நாமும் தான்.இன்று மனித சமுக கப்பல் மூழ்கும் நிலைக்கு சென்றுகொண்டிருகிறது இவற்றை வழிநடத்த தன்நலமற்ற ஒரு தலைவர்கள் வந்தால் போதாது,பல பேர் வரவேண்டும். வாருங்கள்.
Wednesday, August 8, 2012
Monday, July 9, 2012
Tuesday, July 3, 2012
Friday, May 25, 2012
Tuesday, May 1, 2012
நலிவடைந்த நாற்றங்கால்
பூமியில் உள்ள உயிரினங்களில் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் உள்ள உயிரினம் மனித உயிரினம், ஆறறிவு, சிந்தனை, உணர்ச்சிகள், பகுத்தறிவு, போன்ற பல காரணங்களைச் சொல்லலாம்.ஆனால் இன்று நடப்பவைகளைக் கண்டால் மீண்டும் மிருகமாக மாறுகிறோமோ,என்று ஐயம் எழுகிறது.பாலுட்டி வகைகளிலே இரண்டு கருவறை கொண்ட உயிரினம் மனித உயிரினம் மட்டும் தான். மற்றவை எல்லாம் முழுவளர்ச்சி அடைந்து பிறக்கின்றன.ஆனால் மனிதகுழந்தை மட்டும் தான் பாதி வளர்ச்சியில் பிறக்கிறது,மீதி சூழ்நிலை என்னும்இரண்டாம்கருவறையில் வளருகிறது.எனவே தாயின்கருவறை,சூழ்நிலைக்கருவறை ,என இரண்டு கருவறைகள் உள்ளன. சூழ்நிலை என்னும் இரண்டாம் கருவறை இன்று மலடாக மாறிவருகிறதா?இல்லை,சிதைந்துவருகிறதா?என்று தெரியவில்லை.ஒரு வேளை மனிதஇனம் அழிவின் விளிம்பில் உள்ளதா?
இரண்டாம் கருவறையில் தொப்புள் கொடிபோல்,குழந்தைக்குத் தேவையான அறிவையும், குணங்களையும் கொடுப்பவர்கள்,பெற்றோர்கள் ஆசிரியர்கள், அரசு, ஊடகங்கள், மற்றும் இயற்கை.இதில் எதாவது ஒன்று குறைப்பட்டுபோனால் மற்றதை வைத்து சமாளித்துக்கொள்ளலாம்,எல்லாமே குறைப்பட்டுபோனால்,அந்த கருவறையில் வளர்ந்த குழந்தை சமூகத்தை சீர்குலைக்கும் வன்முறையாளனாகவோ அல்லது சமுதாயத்தில்ஒதுக்கப்பட்ட தேவையில்லாத ஆளாகவோ,அல்லது தற்கொலை செய்து கொண்டோ, அல்லது சமுதாயத்தால் கொலை செய்யபட்டோ, உதிர்ந்து போகின்றனர்.
அன்பு, பாசம், நல்லொழுக்கம், சுயதூய்மை, சகிப்புதன்மை,விட்டு கொடுக்கும் மனப்பான்மை, உறவுகளோடு சேர்ந்து வாழுதல்,கருணை உள்ளம் போன்ற நல்ல குணங்கள் பெற்றோரிடத்தில் தான் கற்கின்றனர். ஆனால் இன்று உள்ள ஒரு பகுதி பெற்றோர்கள் பொருள் சேர்ப்பதற்காக பணம் என்னும் மூலதனத்தை முதன்மைபடுத்தி, பணம் சேர்க்கும் போட்டியில் உள்ளதால் தன் குழந்தைகளை கவனிக்க நேரமில்லை, அன்புகாட்ட நேரமில்லை, மனம் விட்டுப்பேச நேரமில்லை.இப்படி,எதற்கும் நேரமில்லாமல்,மேலே சொன்ன நல்ல குணங்கள் எல்லாம் இன்று பணம் மற்றும் பரிசு பொருட்களாய் காட்சியளிகிறது. எனவே தம் குழந்தைகளையும் பொருள் ஈட்டுவதற்கான இயந்திரமாக மாற வேண்டும் என நினைக்கிறார்கள்,இதனால் தம் குழந்தைகளை எந்த பள்ளியில் சேர்த்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும், எந்த கல்லூரியில் சேர்த்தால் நல்ல வேலை கிடைக்கும், எந்த நிறுவனத்தில் சேர்ந்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என கடிவாளம் போட்ட குதிரை போல் பணத்தை நோக்கி ஓடச் செய்கின்றனர்.வசதி உள்ளவர்கள் இப்படி என்றால் வசதியற்ற, படிப்பறிவற்ற பெற்றோர்கள் வயிற்றுபிழைப்புக்கே வதைபட்டு நாள் முழுவதும் வேலை செய்து,சோர்ந்துபோய் வீட்டிற்கு வந்தால்.எப்படி, குழந்தைகளிடத்தில் அன்பு, பாசம் காட்ட முடியும்,மனம் விட்டு பேச முடியும், வாழ்க்கையே போர்களமாக மாறிபோனவர்களுக்கு தம் குழந்தையும் சக போர்வீன் போல்தான் காட்சியளிப்பான், இதற்கு எல்லாம் காரணம் ஒரு சிலரின் பணப் பேராசையே.அதாவது முதலாளித்துவம்.
இன்னும் பல பெற்றோர்கள் வாழ்வின் உண்மை நிலையான,இன்பம் துன்பம், உயர்வு தாழ்வு, பாசம் பகை, வறுமை வசதி, உழைப்பு சோம்பல், போன்ற வாழ்வின் இரண்டு நிலைகளையும் அறிவுறித்தி குழந்தைகளின் மனதை ஒரு கற்சிற்பத்தை போல் அழகாக்கி மெருகேற்றி பளபளக்க செய்யாமல். இன்பம் , சுகம் , உயர்வு , பாசம் , அன்பு , வசதி போன்ற வாழ்வின் மகிழ்ச்சியான நிலையை மட்டும் அறிவுறுத்தி,மற்றதை மறைத்து, அவர்களின் மனதை ஒரு கண்ணாடியை போல் பளபளக்க செய்கின்றனர். இத்தகையை குழந்தைகள்,வாழ்வில் வரும்,ஒரு சிறிய துன்பம் , ஏமாற்றம் , தாழ்வு போன்றவற்றைக் கூட தாங்கிக்கொள்ள முடியாமல் கண்ணாடியின் மேல் கல் விழுந்தாலே உடைந்து சிதருவதுபோல் உடைந்து விடுகின்றார்கள்.
இன்னும் சிலர்,கணவன் மனைவிக்கிடையே சரியான புரிதல் இல்லாமல் பிரிந்து வாழ்வதால் அவர்களின் குழைந்தைகள்சாலையோரத்தில் விதைக்கப்பட்ட மரங்களை போல் ஆதரவு இல்லாமல் வளர்கின்றன.
இத்தகையை குழைந்தைகளை கல்வியாவது நல்வழி படுத்துமா என்று பார்த்தல் அதுவும் இல்லை,நமது கல்வி முறையை ஆராய்ந்தால் தெரியும். அன்று ஆங்கிலேயர்கள்,அவர்களுக்கு அடிமை வேலை செய்வதற்கு மனித எந்திரங்களை உருவாக்க அவர்களால் கொண்டுவரப்பட்ட கல்வி முறை. இன்று, பன்னாட்டு நிறுவனங்களுக்கும்,பெரும் பணக்காரர்களுக்கும், அதே அடிமை வேலை செய்வதற்கு இன்னும் நவீன மனித எந்திரங்களை உருவாக்கும் முறையாக உள்ளது.
மக்களும் தான் ஒவ்வொரும் முதலாளியாக வேண்டும் என்று.பணத்தை முதல்நிலைப்படுத்தி,சுயநலத்துடனும்,பேராசையுடனும் பணம் சம்பாதிக்கும் போடியில் பங்கு கொண்டு உள்ளன. இவற்றை பயன்படுத்தி தனியார் கல்வி நிறுவனங்களும்,கார்ப்பிரேட் நிறுவனங்களை போல் முதலீடு செய்து லாபம் ஈட்டுகின்றனர்.
அதிக லாபம் பெறுவதற்காக பல மாயை செய்கின்றன.பணம் கொடுக்கும் பெற்றோர்களை திருப்திபடுத்த வேண்டும்,அதற்காக அடுக்குமாடி கட்டிடங்கள், மாணவர்களிடம் ஒழுக்கம் என்ற பெயரில் அடக்கு முறைகள், புத்தகத்தில் உள்ளதை அப்படியே நகல்எடுக்க வைத்து மதிப்பெண் பெறவைதல்,குறைகளை வரிசைபடுத்தி வாழ்கையின் மீது பயத்தை ஏற்படுத்துதல்,பணம் சம்பாதித்தவனை ,சாதனை புரிந்தவன் என்று அறிமுகப்படுத்தி,அவனையே முன்மாதிரியாக எடுத்து சொல்லுதல், மதிப்பெண் எடுத்தவன்,மாதசம்பளத்தில் அமர்ந்தவன் தான் சாதித்தவன் என்று போலி முத்திரை கொடுத்து,இதில்,மட்டும் தான் வாழ்கையே உள்ளது போன்று மாயயை ஏற்படுத்தி,மற்ற மாணவர்களை சிந்திக்கவிடாமல் தாழ்வுமனப்பான்மையுடன் சிதைக்கச்செய்கிறார்கள்.
அடுத்து ஆசிரியர்கள்,இவர்கள் ஆசிரியர்கள் என்பதைவிட காசுக்காக வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள், ஏதோ படித்துவிட்டு,புத்தகத்தில் உள்ளதை வகுப்பறையில் வாசித்துக்காட்டுதல்,தேர்வு வைத்தல்,மதிப்பெண் போடுதல்,மாணவர்களின் குற்றங்களை வரிசைப்படுத்துதல்,உளவு பார்த்தல், நிர்வாகம் விடுத்துள்ள இலக்கை எட்டுதல்,போன்ற வேலைகளை செய்யும் மனித எந்திரம் போன்றவர்கள்,அவர்களை குறை சொல்லித்தப்பு இல்லை. அவர்களின் நிர்வாகம் அவர்களை அப்படி மாற்றியுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்கள் இப்படி என்றால் அரசு நிறுவனங்கள் அதை விட மேல், கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்ற துறையை விட குறைவு தான், அந்த நிதியும் கடைசிவரை போய் சேருவதில்லை என்பதுதான் பெரிய குறை,கழிப்பறை கட்டுவதுக்கு இரண்டு லட்சம் ஒதுக்கினால் அது இருபதுஆயிரத்தில் பயன்படாத கட்டிடமாக காட்சியளிகின்றது.ஆசிரியர்கள் கடமைக்காக,சம்பளத்துக்காக வேலை செய்கின்றனர்.சிலர் பகுதி வேலையாக செய்கின்றன.தங்களை நம்பி வந்த ஏழை குழந்தைகளுக்கு அறிவு கண்ணை துறக்காமல் குருடர்களாகவும், மூடர்களாகவும் மாற்றுகின்றார்கள்.இவர்களால்தான் அடிமட்ட மக்கள் என்றுமே அடிமட்டத்திலேயே உள்ளனர்.
ஆசிரியர் தேர்வு செய்யும் முறையே அலங்கோலமாக உள்ளது.ஒரு ஆட்சியில் மூப்பு அடிப்படையில் படித்ததை மறந்துபோன முதியவர்களுக்கு ஆசிரியர் வேலை.இன்னொரு ஆட்சியில் நல்லொழுக்கம் இல்லாமல், அறநெறிகள் அற்ற,மனித குணங்களை நல்லநெறிபடுத்தும் அறிவு இல்லாத,வெறும் புத்தகத்தில் உள்ள தகவல்களை சேமித்துக் கொண்டு தேர்வில் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஆசிரியர் வேலை.இதை விட சிலர் பணத்தின் மூலமும் வேலைக்கு வருகின்றனர்.இவர்களால் எப்படி அறநெறிகல்வி,அறிவியல்கல்வி,போன்றவற்றை கொடுக்க முடியும்?மாணவர்களை எப்படி நன்நெறி படுத்த முடியும்.எதிர்கால இந்தியா மாணவர்கள் கையில் உள்ளது,மாணவர்களின் எதிர்காலமோ இன்றைய ஆசிரியர்களின் கையில் உள்ளது.அனால் இன்றைய ஆசிரியர்களின் கையில் உள்ளதோ அவர் அவர்களின் சுகமான சுயநல வாழ்க்கை தான்.
கல்வி,விவசாயம்,சுகாதாரம்,இவற்றின் வளர்ச்சிதான் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதை அறியாத அறிவு கெட்ட அரசியல் தலைவர்கள்,தான் புகழ் பெறவேண்டும்,ஆதிக்கம் செய்ய வேண்டும்,எல்லாவற்றையும் தனக்கு சொந்தம் ஆக்கிக்கொள்ள வேண்டும்,என்று தனிமனித சுயநலத்தால் ஆட்சிக்கு வர எது வேண்டுமானாலும் செய்கின்றனர், இலவசம், பணம்,கொலை,ஆள் கடத்தல்,கொள்ளை,போன்ற நாகரீகமற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அறிமுகம் இருந்தால் போதும் அறிவு இல்லை என்றாலும் சினிமா, மற்றும் பிற ஊடகங்கள் மூலம் பாமர மக்களிடத்தில், நல்லவர்கள், வல்லவர்களை போல் போலியாக நடித்து,அறிமுகமாகி.பின் அரசியலில் கால்பதித்து,ஆட்சிக்கு வந்துவிடுகின்றனர். இவ்வாறு வந்த கயவர்களுக்கு எப்படி தெரியும் கல்வியின் அருமை.எப்படி வருங்கால சமுதாயத்தை வளமாக்க தெரியும்,
தலைவன் சரியில்லை என்றால் சுற்றி உள்ள சமூகமும்,அழிவை நோக்கி செல்லும்.நல்ல தலைவர்களை தேர்ந்து எடுக்க பாமர மக்களிடத்தில் பகுத்தறிவு இல்லை,ஏனெனில் பகுத்தறிவை கொடுக்கும் கல்வி இல்லை.
பெற்றோர்களால் நல்ல நெறியில் வளர்க முடியாத,ஆசிரியர்களால் அறிவு மறுக்கப்பட்ட,அரசால் ஒதுக்கப்பட்ட குழந்தைகளிடம்,அரவணைத்து நெருங்கி பழகுகிறது,தொலைக்காட்சி, வலைத்தளம், சினிமா,மற்றும் செல்போன் போன்ற ஊடகங்கள்.இவை இரண்டு பக்கத்தை கொண்ட நானயங்களை போல, நல்லது கெட்டது,என இரண்டு பக்கத்தை கொண்டது.மாணவர்களிடத்தில் பகுத்தறிவு திறன் இல்லாததால்,கெட்ட விஷயங்கள் உள்ள பக்கத்தை மட்டும் எடுத்துக்கொள்கின்றனர்.ஏனெனில் அவைதான் அழகாக தெரியும்.இவ்வாறு தீய குணங்களுக்கு ஆட்கொள்ளப்பட்டவர்கள்,அந்த குணத்தை தன் நண்பர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் பரப்புகின்றனர்.நோய்கள் தான் பரவும் ஆரோகியம் பரவாது.
இன்று இளைய தலைமுறையை இடம் தெரியாமல் ஆக்குவதில் ஊடகங்கள் முதல் இடத்தில் உள்ளன.கார்ப்பிரேட் நிறுவனங்களின் விளம்பரங்கள் மாணவர்களிடத்தில் போலியான மதிப்பீடுகளை உருவாக்குகின்றன.சினிமா தயாரிப்பாளர்கள் தன் சுயலாபத்திற்காக எப்படிப்பட்ட படத்தையும் தயாரிக்கின்றனர்.நடிகர்கள் தன் அறிமுகத்துக்காக எந்த மாதிரி படத்திலும் நடிக்கின்றனர்.இன்று பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சினிமா கதாநாயகன் தான் குரு,வழிகாட்டி எல்லாம்.அவர்களை பின்பற்றி தான் நடை,உடை,பாவனை அனைத்தும். படத்தில் கதாநாயகன் செய்யும் நல்ல செயல்களை விட,கெட்ட செயல்களே, போலி அழகாகவும்,தற்காலிக சுகமாகவும் இருப்பதால்,அவையே மாணவர்களை அதிகம் பாதிக்கின்றன.இவை தான் மாணவர்களின் நாகரீக வளர்ச்சி,பண்பாடு, கலாச்சாரம்,போன்ற அனைத்தும்.
அடுத்து தொலைக்காட்சி,உண்மை சம்பவங்களின் நிகழ்ச்சி (பாட்டு,நடனம் ) என்று சொல்லி மாணவர்களிடையே போட்டிகளை வைத்து அவர்களின் உணர்சிகளை ஒளிபரப்பி பணம் சம்பாதிகின்றன.
இன்டர்நெட், செல்போன் ,இவைகள் தான் இன்றைய நவீன உலகில் மாணவர்களின் கையில் கிடைத்த மந்திரக்கோல். உடலையும்,மனதையும், வலிமை படுத்தும் அனைத்து விளையாட்டுகளும் அடிப்பட்டு போய்விட்டன. போலி புத்துணர்ச்சி கொடுக்கும்,செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில்,கற்பனையில் விளையாடுகின்றனர். காதல்,காமம்,இவற்றின் உண்மைநிலையை உணர்த்தும்,வீட்டுச்சூழ்நிலை மற்றும் கல்விச்சூழ்நிலை பயனற்று உள்ளதால்.அதை பற்றி மாணவர்களிடத்தில் தவறான தகவல்களை பரப்பி வருகிறது ஊடகச்சூழ்நிலை.இதனால் மாணவர்கள் காதல்,காமம், இவற்றில் தவறான பாதையில் சென்று சமூக சீர்கேடுகளில் ஈடுபடுகின்றனர்.இதற்கு செல்போனும்,கம்ப்யூட்டர்ரும், இண்டர்நெட்டும் பேருதவியாக உள்ளன. மற்றும் கொலை,கொள்ளை சம்பவங்களுக்கும் பயன்படுகின்றன.நல்லொழுக்கங்களை கற்றிருந்தால் தானே அவற்றை நல்ல செயல்களுக்கு பயன்படுத்த முடியும்.
இவ்வாறு சீர்கெட்ட சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் அன்பு, பாசம், நல்லொழுக்கம், தன்னம்பிக்கை,விட்டுக்கொடுக்கும் மனம், சகிப்புத்தன்மை, சுயதூய்மை,விடாமுயற்ச்சி,விவேகம்,விருந்தோமல்,வீரம்,விசுவாசம்,சிந்தனை, பகுத்தறியும் ஆற்றல், போன்ற நல்ல நெறிகளில் பலவற்றை கைவிடப்பட்டு.
மன அழுத்தம் ,பொறுமை இன்மை ,சகித்துக்கொள்ள முடியாமை, தாழ்வுமனப்பான்மை,போலி கவுரவம்,பழிவாங்கும் குணம், கொலை வெறி, சோம்பல், போன்ற கெட்டநெறிகளை கடைபிடிக்கப்பட்டு. சீரழிந்துகொண்டு இருக்கின்றன,மாணவ சமுதாயம்.
இன்று செய்தித்தாள்களை எடுத்தால்,தினமும் மாணவர்களின் செய்தி தான்.அதாவத,தற்கொலை,கொலை,வன்முறை,ஆபாச ம்,பொருந்தாதகாம ம்,
பலாத்காரம்,இவற்றில் ஈடுபடும் மாணவர்களைப்பற்றிதான்.இவற்றை எல்லாம் பார்க்கும்போது இத்தகைய மாணவர்களை உருவாக்கிய சூழ்நிலையை குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும் என்று மனம் துடிக்கிறது,சமூகத்தில் நஞ்சு பரப்பி கொண்டிருப்பவர்களை தண்டிக்க வேண்டும் என இரத்தம் கொதிக்கிறது.
இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம்,
நாளைய சமுதாயத்தை உருவாக்கும்,
இன்றைய சமுதாயத்தை நல்வழிபடுத்தினால்தான்,
மனித சமூகம் நிலைக்கும்.
எனவே,சமுதாயத்தை சீர்படுத்துவது,காப்பது,நெறிப்படுத்துவது,போன்றவை,
நாம் தான் செய்ய வேண்டும்.
ஏனெனில்,நாம் தான் இன்றைய சமூகம் என்பதை மறக்கக்கூடாது.
நாளைய சமுதாயத்தை உருவாக்கும்,
இன்றைய சமுதாயத்தை நல்வழிபடுத்தினால்தான்,
மனித சமூகம் நிலைக்கும்.
எனவே,சமுதாயத்தை சீர்படுத்துவது,காப்பது,நெறிப்படுத்துவது,போன்றவை,
நாம் தான் செய்ய வேண்டும்.
ஏனெனில்,நாம் தான் இன்றைய சமூகம் என்பதை மறக்கக்கூடாது.
Tuesday, April 10, 2012
Monday, April 9, 2012
Friday, April 6, 2012
இயக்கத்தின் காட்சிகளாக மாற்றங்கள்
கருவறையின் கதவைத்திறந்து,
காலஊர்தியால் கதிரவனை வலம்,
வந்துக்கொண்டிருக்கையில்,
எத்தனை மாற்றங்கள்.
மழலையில் இருந்து மனிதனாக,
அறியாமையல் இருந்து அறிஞராக,
இன்பங்களும், துன்பங்களும்,
வந்தவர்கள் எத்தனைபேர்,
போனவர்கள் எத்தனைபேர்,
மறக்கவேண்டியதை மறந்து,
நினைக்கவேண்டியதை நினைத்து,
நிகழ்ந்துக்கொண்டிருக்கும்,
இந்த மாற்றங்கள் தான்,
இயக்கத்தின் காட்சிகள் என்பதை கண்டு.
உண்மையின் நிழலில் பயணிப்போம்.
Thursday, April 5, 2012
தனித்து வாழ்வோரில் தமிழகம் முதலிடம்
பண்பாட்டிற்கும்,கலாச்சாரத்துக்கும்,
பேர்போன
பாரதநாடு.
அதிலும்
விருந்தோம்பலிலும்,
குடும்ப
உறவுகளிலும்,நாகரிகத்திலும்,நந்தவனமாக
இருந்த,
தமிழகம்.
இன்று,
நாற்றம்
அடிக்கிறது மேலைநாட்டுக்
கலாச்சார கழிவுகளால்.
நமது
பண்பாட்டின் மனம் அறியாமல்
பகட்டாய் இருக்கிறது என்று
சாக்கடையில் விழுந்த தமிழ்
மக்கள்.அன்பால்
இருப்பதற்கு கூட எப்படி?
என்று
வகுப்பெடுக்கும் மேலை நாட்டு
கலாச்சாரத்தை தலையில்தூக்கி
வைத்துக் கொண்டிருக்கிறோம்.
மற்றவரிடம்
இருந்து எதை பின்பற்றினாலும்
நல்லதை மட்டுமே பின்பற்ற
வேண்டும்.நம்மிடமும்
சில நல்லவை இருக்கிறது அதை
விடுத்து அப்படியே அடுத்தவர்களை
பின்பற்றகூடாது.
ஏனெனில்
யாரும் நூறு சதவீதம் நல்லர்வர்கள்
இல்லை.
சினிமா, தொலைகாட்சி, மற்ற ஊடகங்கள் போன்றவை,குடும்பம் என்பது இப்படிதான் இருக்க வேண்டும், அனைவருக்கும் மிகைப்படுத்தப்பட்ட சுய கௌரவம் வேண்டும்,சமூகத்தில் சிலவற்றை உயர்வுபடுத்தியும் அவசியமானதை தாழ்வுபடுத்தியும் காட்டுதல், போன்ற போலியான தனிமனித, குடும்ப,சமூக மதிப்பீடுகளை உருவாக்குகின்றன. இன்று ஊடகங்கள் தங்களின் சுயலாபத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்து,மக்களிடத்தில் உள்ள பகுத்தறிவையும் சிந்தனையும் சீரழித்து,பாமரர்களாகவும் ,சிந்திக்க இயலாதவர்களாகவும் மாற்றுகின்றன.மக்களின் பணம்,உழைப்பு,அன்பு,குடும்ப உறவு,தனி மனித சுதந்திரம்,போன்ற அனைத்தும்,கார்பெரடே நிறுவனங்கள் தன் பணப்பேராசையால் சுரண்டப்படுவதை கூட அறிய முடியாத அப்பாவிகளாக ஆக்கப்பட்டுளோம்.
சினிமா, தொலைகாட்சி, மற்ற ஊடகங்கள் போன்றவை,குடும்பம் என்பது இப்படிதான் இருக்க வேண்டும், அனைவருக்கும் மிகைப்படுத்தப்பட்ட சுய கௌரவம் வேண்டும்,சமூகத்தில் சிலவற்றை உயர்வுபடுத்தியும் அவசியமானதை தாழ்வுபடுத்தியும் காட்டுதல், போன்ற போலியான தனிமனித, குடும்ப,சமூக மதிப்பீடுகளை உருவாக்குகின்றன. இன்று ஊடகங்கள் தங்களின் சுயலாபத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்து,மக்களிடத்தில் உள்ள பகுத்தறிவையும் சிந்தனையும் சீரழித்து,பாமரர்களாகவும் ,சிந்திக்க இயலாதவர்களாகவும் மாற்றுகின்றன.மக்களின் பணம்,உழைப்பு,அன்பு,குடும்ப உறவு,தனி மனித சுதந்திரம்,போன்ற அனைத்தும்,கார்பெரடே நிறுவனங்கள் தன் பணப்பேராசையால் சுரண்டப்படுவதை கூட அறிய முடியாத அப்பாவிகளாக ஆக்கப்பட்டுளோம்.
அனைத்து மனித குணங்களையும் மறந்து பணம், காமம், போதை மயக்கம், இந்த முன்று மட்டுமே முதன்மை படுத்தப்படுவதால் தான்,இன்று நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்.
நமது தாத்தா, பாட்டி காலத்தில் குடும்ப உறவுகள் சிதையாமல் இருக்க, விட்டுக்கொடுத்து போதல், சகிப்புத்தன்மை,அன்பானவர்களிடம் சுய கௌரவத்தை குறைத்தல், கருணையுடன் நடந்து கொள்ளுதல் ,போன்ற நல்லொழுக்கங்கள் ,கடைப்பிடிக்கப்பட்டன. அன்பையும், கருணையையும் முன்னிலை படுத்தினர். இன்று தான் என்ற எண்ணம் மேலோங்கி, அளவுக்கு அதிகமான சுய கௌரவத்தால், அம்மா அப்பா, கணவன், மனைவி, பிள்ளை போன்றவர்களிடம் கூட சுயகௌரவம், சுய மரியாதை பார்க்கும் சூழல் உள்ளது.அன்பானவர்களிடமே போட்டிகள் நடக்கின்றன. இவை பொறாமையாக மாறி பின் போர்களமாக காட்சியளிகின்றன.
குடும்பம் என்றால் கணவன் வெளி வேலைகள் செய்வதும்(அதாவது குடும்பத்திற்கு பொருள் ஈட்டுவது). மனைவி ஈட்டிய பொருளை நிர்வகிப்பதும், குழந்தைகளை பெற்று வளர்ப்பதும் .இருவரின் செயல்களிலும் எதுவும் தாழ்ந்தது இல்லை, குடும்பத்தின் இயக்கத்திற்கு இரண்டும் அவசியமானவை, இதற்கு ஏற்றார் போல தான் ஆண், பெண் உடல் அமைப்பை இயற்க்கை படைத்துள்ளது. பெண்கள் தான் குழந்தை தான் பெற முடியும் ஆண்கள் பெற முடியாது, பெண்களின் உடல் மென்மையாகவும், ஆண்களின் உடல் கடினமாகவும் இது போன்ற பலவற்றை கூறலாம் .
கணவன் தான் செய்யும் வெளிவேலைகளை உயர்வாக நினைத்து, வீட்டு வேலைகளை அலட்சியபடுத்தி, மனைவியை அடிமை செய்வதும், ஆதிக்கம் செய்வதும்.மனைவி தான் செய்யும் வேலைகளை தாழ்வாக கருதி கணவனுக்கு சமமாக வெளி வேலைக்கு செல்ல நினைத்து அனைத்து வேலைகளுக்கும் ஆணுக்கு பெண் சமம் என்று இயற்க்கைக்கு மாறாக களம் இறங்குதல்.போன்ற தவறான சுய மதிப்பீட்டால் இன்று அவரவர் தனிமை படுத்திக்கொள்கின்றனர்.
கணவனும் மனைவியும் இரண்டு தண்டவாளங்களாகவும் ,தாய் தந்தை தண்டவாளங்களை தாங்கும் கட்டைகளாகவும், குடும்ப உறவுகள் சல்லி கற்களாகவும், மற்ற சமூக உறவுகள் இருப்பக்கமும் நந்தவனமாகவும் ,இருந்தால் தான், வாழ்க்கை என்னும் இரயிலில் இனிமையாக பயணிக்க முடியும், இதில் ஒருவருக்கொருவர் தான் தான் பெரியவர் என்று போட்டிபோட்டால், இரயில் பாதை,மாறிபோன போர்க்களத்தில், எப்படி வாழ்க்கை இரயில் ஓடும்.பிறகு எப்படி இனிமை வரும்.அனைவரும் அனாதைகளாக, நாகரீக நாடோடிகளாக , தான் இருக்க முடியும்.
இன்று அப்படி தான் உள்ளோம் என புள்ளி விவரம் கூறுகிறது.
இந்திய அளவில் கணவன் அல்லது மனைவி இழந்தோர், விவாகரத்து ஆனோர், மற்றும் பிரிந்து வாழ்வோர், பட்டியலில் தமிழகம் முதலிடம். இதை கேட்கும் போது பகுத்தறிவு பயனற்று போய் விட்டதா என்று தோன்றுகிறது.
...............................
...............................சாந்தமூர்த்தி
Thursday, March 29, 2012
பறிகொடுத்த பகுத்தறிவு
மக்களின்
'உழைப்பு'
கோடி
கோடிகளாக,
உள்நாட்டில்
ஊழல்களாக !
வெளிநாட்டில்
பதுக்கல்களாக !
உழைக்கும்
'மக்கள்'
தெருக்கோடியில்,
மாற்று
துணி இல்லாமலும் !
மானங்காக்க
முடியாமலும் !
இரத்தம்
கொதிக்கிறது!
மானங்கெட்ட
அரசியல்வாதிகளை,
பார்த்து
அல்ல !!
கிரிக்கெட்
சூதாட்டத்திலும்,
சமூகத்தை
சீர்குலைக்கும் சினிமாவிலும்,
பொழுதுபோக்கு
என்று சொல்லி,
சிந்தனையையும் !
பகுத்தறிவையும் !
பறிகொடுத்த,
என்
இளைய சமூகத்தை பார்த்து.
Friday, March 23, 2012
Friday, March 16, 2012
Friday, February 24, 2012
Monday, February 6, 2012
எங்கே போகிறோம் நாம்
வாழ்க்கை
பாதையில்,
ஓட
நினைத்து,
ஒதுங்க
மறந்த -
மனதை,
பற்றி
கொண்ட பரபரப்பு,
உறக்கத்திலும்
உயிருடன் உள்ளது.
உறவுகளையும் !
உடன்
வந்தவர்களையும் !
பார்க்காமல்
பரபரப்பு -
என்னும்,
கடிவாளத்துடன்
கடக்கிறது -
பாதையை.
பணத்தில்
புதைந்து போன -
பாசம்.
அகத்தில்
அழிந்து போன -
அன்பு.
எல்லாம்
கடமையாக காட்சியளிகின்றது.
எதற்கும்
நேரம் இல்லாமல்,
எங்கே
போகிறோம் நாம் ,,,,,,,,
Friday, January 27, 2012
புகையும் செல்கள்
அழகு செல்கள் கலை இழக்கின்றன ,
உதடு செல்கள் உயிர் இழக்கின்றன ,
சுவாச செல்கள் சுகம் இழக்கின்றன ,
எதனையும் அறியாமல் போதை மயக்கத்தில்
மூளை செல்கள்.
கரிக்கலன்களாக மாறி போன
நுரையீரல் நுண்அறையில் ஆவலுடன் தேடுகிறது
இரத்த சிவப்பணுக்கள்
ஆக்ஸிஜன் அணுக்களை .
தினமும் சிதைக்கப்படும் செல்கள்,
இறுதியில் போராட்டத்தில் இறங்குகின்றன
அளவுக்கு அதிகமான செல்களை உருவாக்கி!!!
போராடும் செல்கள்தான் புற்று நோய் – என்று,
அறியாமல் உயிரின் அழிவில்,
சாம்பல் புகையின் சுகத்தில்,
சில ஆறறிவு உயிர்கள்.
Subscribe to:
Posts (Atom)













.jpg)










