Friday, January 27, 2012

புகையும் செல்கள்



அழகு செல்கள் கலை  இழக்கின்றன ,
உதடு செல்கள்  உயிர் இழக்கின்றன ,
சுவாச செல்கள்   சுகம் இழக்கின்றன ,
எதனையும் அறியாமல்  போதை  மயக்கத்தில்
மூளை  செல்கள்.

கரிக்கலன்களாக மாறி  போன 
நுரையீரல் நுண்அறையில் ஆவலுடன்  தேடுகிறது
இரத்த சிவப்பணுக்கள்
ஆக்ஸிஜன்  அணுக்களை .

 தினமும் சிதைக்கப்படும்  செல்கள்,
 இறுதியில் போராட்டத்தில்  இறங்குகின்றன
 அளவுக்கு அதிகமான செல்களை  உருவாக்கி!!!

போராடும்  செல்கள்தான் புற்று நோய் என்று,
அறியாமல்  உயிரின் அழிவில்,
சாம்பல்  புகையின்  சுகத்தில்,
சில ஆறறிவு  உயிர்கள்.

No comments:

Post a Comment