பார்வை
தனிநபர் பிரச்சினைகள் எல்லாம் சமூக பிரச்சினைகளின் தனிநபராக்கமே
Saturday, September 28, 2013
மக்களின் குணம்
அன்று,உறவுகளோடு இருந்த "இனிமை"
இன்று,கொடுமையாக இருக்கிறது.
அன்று,கொடுமையாக இருந்த "தனிமை"
இன்று,இனிமையாக இருக்கிறது.
சூழ்நிலையை பொறுத்தே அமைகிறது சாதாரண மக்களின் குணம்,
சில அதிகாரம் படைத்தவர்களின் குணத்தை பொறுத்தே அமைகிறது சூழ்நிலை.
அறிவியல் வளர்ச்சி
பயன்படுத்த முடியாதபடி நீரை மாசுபடுத்தி
சுத்திகரிக்கும் எந்திரத்தை கண்டுபிடிப்பதுதான்,
-அறிவியல் வளர்ச்சியா ?
எந்த உணவு பொருட்களும் விளையாதபடி நிலத்தை மாற்றி
மரபணுமாற்று பயிர்களை கண்டுபிடிப்பதுதான்,
-அறிவியல் வளர்ச்சியா?
புவி வெப்பநிலை அதிகரிக்கும் அளவு காற்றை மாசுபடுத்தி வெள்ளத்தடுப்பு,வறட்சிநிவாரண முறைகளை கண்டுபிடிப்பதுதான்,
-அறிவியல் வளர்ச்சியா?
இப்படி வளர்ச்சி என்றபெயரில்
அறிவியலை மறுசுழற்சி இல்லாமல் பயன்படுத்துவதால்
மனித இனம் மறுமலர்ச்சி இல்லாமல் மாண்டு போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
Tuesday, September 3, 2013
வெற்றி
"வெற்றி" என்ற சொல் சிலரை செதுக்கி,பலரை சிதைக்கிறது.
100பேரில் 3பேர் வெற்றிபெற்றான் என்பது
அவர்களின் அறிவால் அல்ல
மீதம் உள்ள 97பேரின் அறியாமையால்.
ஏனெனில்,
அறிவை அளவிட முடியாது
ஒப்பிட்டு தான் அறியமுடியும்
பொருளாதார முன்னேற்றமாம்
அன்று, பலர் உயர் தியாகம் செய்து வெளியேற்றிய வெள்ளையனை,
இன்று புதிய பொருளாதார கொள்கையால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.
அது,விடுதலை போராட்டமாம்.
இது,பொருளாதார முன்னேற்றமாம்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)