Thursday, December 29, 2011

மாண்புமிகு மரம்



வாயுக்களின் சரிவிகிதத்தை சமநிலைப்படுத்தி,
பிராண வாயுவை வளப்படுத்தி,
கரியமில வாயுவை கட்டுப்படுத்தி,

வரண்ட காற்றில் ஈரத்தை உண்டாக்கி,
மேகத்தில் மழை வரச்செய்து,

வெயில் காலத்தில் வெப்பத்தை தனித்து,
மழைக்காலத்தில் மண் அரிப்பை தடுத்து,
மண்வளத்தை மேம்படுத்தி,

இயற்கை சக்தியால் அணுக்களை சமைத்து
உயிரினங்கள் உண்ணும் உணவாக மாற்றி!
உயர்திணை ,அஃறிணை,உயிரினங்களை
வாழ வைத்துக் கொண்டிருக்கும் ,

தன்னலமற்ற மரங்களை அழித்துக்கொண்டிருக்கும் .
சுயநலமான மாந்தர்களுக்கு எப்படி தெரியும்?

"அழிவது மரம் இல்லை
அவர்கள் தான் என்று"

Tuesday, December 27, 2011

உருக்குலையும் உறவுகள்





மரம் வேரை நம்பாமல்
விதைக்கிறது விழுதுகளை-அது
தவிக்கிறது,தரையை தொட்டால்
தாழ்ந்து விடுவோமா-என...

முட்டி மோதி முளைக்கிறோம்
வெட்டி விடுவார்களா-என....

எண்ணங்களின் போர்க்களத்தில்
ஏமாற்றப்படுவோமா-என....

சந்தேக சகதியில்
சுடாத செங்கல்லில்
கட்டப்பட்ட கௌரவம்,
சரித்திரம் படைக்க நினைக்கிறது.

விட்டு கொடுக்க முடியாத
கனவு கோட்டை,
வெட்டி எரியப்பட்டு,
வெளியேற்றப்படும் உறவுகள். 

Wednesday, December 21, 2011

உண்மையின் உறுத்தல்





உண்மையை மறைத்திருக்கும் போலியான
உடைகளையும், அணிகலன்களையும்,
கவிதையின் மூலம்
களைத்து, நிர்வாணமாக்கினால்.
கூச்சப்படுவது!

உண்மை அல்ல - அதை
பார்க்கும் கண்கள் தான். 

Sunday, December 18, 2011

தேர்தல் கலவரம்


ஐந்து வருடம் பொது சொத்தின் சுகத்தை,

அனுபவித்துக் கொண்டும்!

அபகரித்துக் கொண்டும்!

ஆட்சி முடிந்ததும் ஆயத்தமாகிறது.

அனைத்துக் கட்சிகளும்,


தேர்தல் நேரத்தில் மட்டும்,தெருத்தெருவாக,

திரிகிறார்கள் தயக்கமின்றி தலைவர்கள்.


தேர்தல் விளம்பரப்பலகையில்
,
வரைகிறார்கள், வெட்கமில்லாமல்.

வருந்துகிறது, வார்த்தைகள்.


சாலைகளில் ஒலிக்கிறது, ஒலிபெருக்கி.

தவிக்கிறது தமிழ்மொழி-இதுதானா

தமிழ் வளர்க்கும் முறை.


தேர்தல் முடிந்ததும் தொடர்கிறார்கள்,

அவரவர் வேலைகளை,


ஏமாறும் மக்கள்!

ஏமாற்றும் தலைவர்கள்!

Friday, December 16, 2011

அகற்ற முடியாத அசுத்தம்


அசுத்தம் என்பது வறுமையின் சின்னமா?
இல்லை,
சோம்பேறித்தனத்தின் அடையாளமா?

சுயத்தூய்மையே இல்லாதவர்களிடம்,எப்படி வரும்,
சுற்றுப்புறத் தூய்மை.

நகர சுகாதார சீர்கேட்டில் நகர்கிறது,
நகர வாழ்கை.

நீர்,நிலம்,காற்று,
முக்கிய மூன்றையும்,
அசுத்தப்படுத்தினால் அல்லல் படுவது,

நீங்கள் இல்லை,
உங்கள் பிள்ளை.

இப்படி, 

அகத்திலும், புறத்திலும்,
குவிந்துள்ள குப்பைகளை
அகற்ற முடியாது!

அவரவர்களும்,
ஆள்பவர்களும்,
அடியெடுத்து வைக்கும் வரை.

மானிட சமுதாயம்




சுயநலத்தால் சுருங்கி போனது
"சிந்தனை வட்டம்"

உறவுகளையும் உருக்குலையா வைக்கிறது
சுருங்கிய வட்டத்தில் - மனம்.

சிறிய மனதிற்குள் செல்ல முடியாமல்
சிதறுகிறது - நல்ல குணம்.

உள்ளிருக்கும் தீய குணம் பிறரை
வருந்த செய்கிறது தினம்.

வருந்தியவன் வஞ்சனையில்லாமல் தண்டிக்கிறான்
தீய குணத்தை பெற்றுக் கொண்டு!

மனிதர்களாலே மாண்டுவிடப் போகிறது!

"மானிட சமுதாயம்"

Wednesday, December 14, 2011

நீர்த்துப் போன நீர் வளம்






புனித நதியில் நீராடினால்!
தீராத நோயும் தீரும்-அன்று.
வராத நோயும் வரும்-இன்று.

முன்னோர்கள் கொடுத்துப்போன
நீர் வளத்தை,
முழு நேரமும் கெடுத்துக்கொண்டிருக்கிறோம்
தொழில் வளத்தால்.

மேம்பாடு அடைந்த மனித வளத்தால்,
படும்பாடு அடைந்ததுள்ளது நீர் வளம்.

இப்படி,
வளங்களை வீணடித்து
வஞ்சனையுடன்,
வரவேற்கிறோம்
வருங்கால-சமுதாயத்தை.

Tuesday, December 13, 2011

கசந்ததுபோன காலை உணவு




கதிரவன் கண் விழித்ததும்,
வயல் வேலையில் கணவனும்.
சமையல் வேலையில் மனைவியும்.
பின்பு,

இளங் காலைப் பொழுதில்,
இதமான மர நிழலில்,

வயகாட்டு வரப்பில்,
வாய்க்கால் நீர் ஓசையில்,

பனி படர்ந்த புல் விரிப்பில்,
வாழை இலை விரித்து,
காலை உணவை,
அன்பகாவும் அமைதியாகவும்,
அனுபவித்த விவசாய,
கணவனும் மனைவியும்.

இன்று,
ஆளுக்கொரு வெளிநாட்டு நிறுவனங்களில்,
கடமைக்கு உண்ணும் காலை உணவு.
இன்னும் சொல்ல,
இடம் இல்லை.

கல்வியில் கரை சேராத மக்கள்




அறிவு வளர்ச்சியின் அடிப்படையை அறிவுறுத்தாத
ஆரம்பப்பள்ளியில் 'அடிபட்டு',

நல்லொழுக்க நடைமுறைகள் நசுக்கப்பட்ட
நடுநிலைப் பள்ளியில் 'நலிவடைந்து',

உயர் குணங்களின் உண்மையை உணர்த்தாத
உயர்நிலைப் பள்ளியில் 'உணர்வற்று',

மெய்யறிவு மறைந்து போன
மேல்நிலைப் பள்ளியில் 'மதி மயங்கி',

கல்லூரியிலாவது கரை சேரலாம்-என்று
கல்வி கடன் கேட்க,
தேசிய வங்கிக்கு சென்றால்
தேதி சொல்லி அனுப்புகிறார்கள்.

இப்படி,
மனதளவிலும்!
பண அளவிலும்!
என்றும்,
கரை சேராத
கடை நிலை மக்கள். 

Monday, December 12, 2011

இறைவனின் சமநிலைக் கோட்பாடு




தாவர எண்ணிக்கையை சமநிலைப்படுத்த,
தாவர உண்ணிகளை படைத்தான்.

தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்த,
மாமிச உண்ணிகளை படைத்தான்.

மாமிச உண்ணிகளின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்த,
மனிதர்களை படைத்தான்.

மனிதர்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்த,
அவர்களுக்கு ஆசை என்னும் ஆறாம் அறிவை கொடுத்தான்.

சமநிலைப்படுத்த துவங்கியுள்ளோம்,
ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டு.

இயற்கை என்னும் இறைவனின் சமநிலைக் கோட்பாட்டின்,
இறுதி நிலையில் இருக்கிறோம்.

Thursday, December 8, 2011

உண்மையான பாதை



உன் வாழ்க்கை பாதையில் பயணிக்கும் போது
கண்களை பயன் படுத்தாதே!
அறிவை பயன்படுத்து.
ஏனென்றால்?

போலியான பாதை தான் express highway போல் 
மாய தோற்றத்தில் தெரியும்.
உண்மையான பாதை
சாதாரண பொடிநடை தான்.

மனித கணினி




மரபு வழியில் உருவாக்கப்பட்ட
மூளை என்னும் வன்பொருளில்(hardware)

சூழ்நிலையால் உருவாக்கப்பட்ட

எண்ணம் என்னும் மென்பொருளை(software)


சோதித்துப் பார்க்காமல்(testing)

நிலைநாட்டப்படுவதால்(installing)


தீய எண்ணங்களால்(virus)


பாதிக்கப்பட்டு செயலிழந்து விடுகின்றன

"மனித கணினி”.

போட்டிச் சமுதாயம்


உள்ளத்தை வளப்படுத்தும் கல்வியில்
போட்டி!
உடலை வளப்படுத்தும் விளையாட்டில்
போட்டி!
போதாது என்று தொலைக்காட்சிகள் உருவாக்கும்
போட்டிகள் பல,

வெற்றி பெறுபவர்

மாய புகழ் மயக்கத்தில் தள்ளப்படுகிறார்கள்.
தோல்வி அடைபவர்
தவறானஎண்ணங்களுக்கு தள்ளப்படுகிறார்கள்.

இப்போட்டிச் சமுதாயத்தில்

வெற்றி பெறுபவர் சிலரே,
அதனால்,
அதிகரிப்பது தவறான எண்ணங்களே!

எனது நினைவுகள்




பள்ளி முடிந்ததும் கில்லி விளையாட்டு,
சைக்கிள் டயரில் சாகசம் செய்வது,
தென்னம்பிஞ்சில் தேர் இழுப்பது,
பனங்காய் வண்டியில் சுற்றுலா செல்வது,
குறிபார்த்து அடிப்பதில் கோலிகுண்டு,
என்று,

என் இளைய வயது இன்பங்களை எடுத்துரைக்க
இடம் இல்லாமல் இன்னும் பல விளையாட்டுகள்

இன்று,
ஏக்கத்துடன் எண்ணிப் பார்க்கிறேன் எனது
நினைவுகளை,
உடல் பலவீனத்துடன் உட்கார்ந்த இடத்தில்
விளையாடுவதை காண்கிறேன்
இன்றைய குழந்தைகள்,
வீடியோ கேம்,
மொபைல் கேம்,
கம்ப்யூட்டர் கேம்.

இந்தியா ஒளிர்கிறது




சிதைந்து போன குடும்ப உறவுகள்,
விலைபோன எல்லா மனித உணர்வுகள்,

பன்னாட்டு நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்ட
இளைய தலைமுறையினரின் வாழ்க்கை,

நகரத்து அகதிகளாக உருமாறிய உழவர்கள்,
மலடுகளாக மாறிய விவசாய நிலம்,

அடிமைகளாக்கப்பட்ட அடித்தட்டு மக்கள்,
கானல் நீராய் காட்சியளிக்கும் கல்வி,

நஞ்சாக மாறும் நீர் நிலைகள்,
நோய் உற்பத்தியின் வேகம் நொடிகளில்,

இப்படி,

இந்தியா ஒளிர்கிறது,
அறிவு மிகுந்த அரசியல்வாதிகளின்
பொருளாதாரக் கொள்கைகளில்.  

Monday, December 5, 2011

இறைவன் எங்கே



அன்பாகவும்,
அறிவாகவும்,
நல்ல எண்ணங்களாகவும,
உயர்ந்த நம்பிக்கையாகவும்,


எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை.


எங்கெங்கோ சுயநலத்துடன்,
தேடிக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவருக்கும்
தனித்தனி "சிலைகளாக"


கடவுள் இருப்பது,
                                   கற்சிலையிலா?
                                   கருணை மனதிலா?

Sunday, December 4, 2011

மனதின் சிதறல் மதுவில்





இன்பம் துன்பம் இரண்டிலும் - மதுவிருந்து
அவர்களுக்கு என்றுமே வராது - சாதாரண மனது.

வயிறு முட்ட குடித்து வாந்தி
எடுக்காமல் இருப்பவன் - சகலகலா வல்லவன்,
மற்றவர்களும் வல்லவனாக மாறும் - முயற்சி,
நாளை தனியாக குடிக்கும் - பயிற்சி,
இது பித்தனாக மாற்றும் - சுழற்சி.

ஆண்மையின் அடையாளம் அடங்கியிருப்பது - மதுவிலா!
அதனால் தான் ஆண்கள் அலைமோதுவது-மதுக்கடையிலா!

இதனால் தான் ஆரம்பிக்கிறார்களா!
பள்ளி பருவத்திலே ............!!!!!!!?

தடுமாறும் தாய்மொழி




கையெழுத்து முதல் கணக்குப் பார்ப்பது
வரை தாய்மொழி பயன்படுத்தினால்
தரக்குறைவா .......?

அலுவலகக்குறிப்பேடுகள் தாய்மொழியில்
இருந்தால் தகுதி பெற்றுவிடும் என்ற
தயக்கமா ........?

ஆய்வறிக்கைகள் தாய்மொழியில் ஒரு பிரதி
வெளியிட்டால் வளர்ந்துவிடும் என்ற
வஞ்சகமா .......?

அரசியல்வாதிகளும் சினிமாகாரர்களும்
காட்சிப் பொருளாக வைத்து காசு பார்க்கும்
தந்திரமா .......?

தாய்மொழியை தரம் உயர்த்தாமல்
அயல்மொழியில் அடைக்கலம் தேடுபவர்களை
வர்ணிக்க வார்த்தை இல்லை........!!!!

Saturday, December 3, 2011

வழிமாறும் பயணம்



வறுமையில் கல்வி கற்பதை,
வெறுக்கச் செய்கின்றது கல்விச் சூழ்நிலை.

வெறுப்படைய வைக்கிறது ஊடகச் சூழ்நிலை .
நழுவிப் படுகின்றனர் நடுநிலைப் பள்ளியிலே!!

பின்பு,
வளர்கிறார்கள்
அறிவிலும்,
அந்தஸ்திலும்,
வறுமை கோட்டுக்கு கீழ்....

வசதி உள்ளவர்கள்
தூக்கி எறியும் சக்கையாக!!!
அல்லது,
வன்முறையாளனாக!!!

Friday, December 2, 2011

மாறவேண்டிய மனிதர்கள்




வறுமையை விரட்டுவது போல்
வசை பாடி....!

துன்பத்தை துடைப்பது போல்
துதி பாடி....!

ஆன்மீகத்தை அசிங்கப்படுத்தி!!
காவி உடையை களங்கப்படுத்தி!!

முற்றும் துறந்தவனை போல் முக்காடு போட்டு
முடிந்தவரை சுரண்டிக் கொண்டு,

கடவுள் என்று கபட நாடகத்தில்
நடித்துக் கொண்டிருக்கும்,
நயவஞ்சக "சாமியார்கள்”.

மற்றும்,

இறை நம்பிக்கையில் ஏமாறும்
இன்றைய "மனிதர்கள்”.

யாரை மாற்றுவது???




Thursday, December 1, 2011

வீழ்ந்த விவசாயம்





வள்ளுவன் வாழ்த்திய உயர்ந்த தொழில்
உழவுத் தொழில் - இன்று,

உழவர்களே கீழ்த்தரமாக பார்க்கும் நிலைக்குத்
தள்ளப்படுவதற்கு
காரணம்....,,,

இன்றைய,,

ஆடம்பர அடிமை வாழ்கையா?
மாத சம்பள மயக்கமா?
வாட்டி எடுக்கும் வறுமையா?

ஏழை விவசாயிகள்






நாங்கள் உழைத்து விளைவித்த பொருளை
எங்களால் விலை கூற முடியாமல், 

ஏமாறும் - 'எழுத்தறிவற்றவர்கள்'.

விளைநிலத்தை வீட்டு மனைகளாக்க,

பதவியை பயன்படுத்தி பாதிவிலைக்கு ,
வாங்குபவர்கள் - 'பகுத்தறிவாளர்கள்', 
நாங்கள் - 'படிப்பறிவற்றவர்கள்'

நகரத்தை நோக்கி நகர்த்தப்படும்
'அடிமைகள்', 

என்றும் எல்லோருக்கும் உழைத்துக் கொடுக்கும்
'உழைப்பாளிகள்', 

ஏனெனில்
நாங்கள் "ஏழை விவசாயிகள் ”.

மாறாத மாற்றம்






அன்று உயிராய் இருந்தது-இன்று,
சாதாரண உணர்வுகள்.

இன்று நெருக்கமாக இருப்பது-நாளை,
சுகமான நினைவுகள்.

மனமும் குணமும் மட்டும் மாறுவதில்லை,
மாறக்கூடிய அனைத்தும் மாறுகிறது.

வந்த பாதையை பார்த்தால்,
குழப்பத்துடன் தெரிகிறது,
வருங்கால பாதை.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில்,
வளர்கிறது!
மாற்றங்களின் வேகமும்,
மறக்கும் குணமும்,

அன்று தலைமுறை இடைவெளியில் தவித்தது.
இன்று ஒரே தலைமுறையில்,
வருட இடைவெளியில் வருந்துகிறது.

வெவ்வேறு நிலைகளில்,
நிலை மாறும் மனங்கள்.
நிலை மாறும் உலகில்.

Tuesday, November 29, 2011

பணம்



பணத்தை மையப்படுத்தி சுழலும்
இப்பூமியில்,

'பணம்'
இருப்பவன் இரக்கமற்றவானாக மாறுகிறான்,
இல்லாதவன் பொல்லாதவனாக மாறுகிறான்,

பாசத்தை பாதாளத்திற்கு அனுப்புகிறது,
அன்பை ஆகாயத்திற்கு அனுப்புகிறது,

சிந்திப்பவனை செயலிழக்கச் செய்கிறது,
சாதிப்பவனை சாதாரண மனிதனாக்குகிறது,

நல்ல எண்ணங்கள் நசுக்கப்பட்டு,
தீய எண்ணங்கள் திலகமிட்டு
வரவேற்கிறது.

இப்படி,
பணத்தை
முதலிடப்படுத்திய-'முதலாளித்துவம் '
என்று மாறும் - 'சமத்துவம்'.





முதலாளித்துவ நாடு





கல்வி நிறுவனங்கள்
தொழிலாளர்களை உருவாக்கும் - தொழிற்சாலைகள்.

கலைஞர்களும் அறிஞர்களும்
காசுக்கு வேலை செய்யும் - வேலையாட்கள்.

அனைத்து உறவுமுறைகளும்
பணபரிமாற்ற - உறவுமுறைகள்.

இப்படி,
மூலதனத்தை முதன்மைப்படுத்தி,
பணியாற்ற வைக்கும்
தொழில் நிறுவனமாக
மாறி வருகிறது நமது நாடு.

"முதலாளித்துவ நாடு"



குணங்களின் போராட்டம்





முதலாளித்துவ வர்க்கத்தில்,


பேராசை பிடித்தவனும்,


சுயநலம் கொண்டவனும்,


உருவாகிறார்கள் முதலாளிகளாக.




.
எத்தனை பேரை நசுக்கி நிமிர்ந்தான் !



என்பதை மறந்து,முத்திரை கொடுக்கிறோம்,



'சாதித்தவன்' என்று.







அனைவரும் சாதிக்க,


,
போராடும் போராட்டத்தில்.




தோல்வி அடைகிறது,

,
அனைத்து நல்ல குணங்களும்.




வெற்றி பெறுகிறது,


எல்லா தீய குணங்களும்.




குவிகிறது குப்பைகள்,


மனித மனங்களில். 


சாதனைகள்





ஆசிரியரின் சாதனை!
மற்றதை மங்கச்செய்து மார்க் வாங்கவைப்பது.

மாணவரின் சாதனை!
மனப்பாடம் செய்து மார்க் வாங்குவது.

கல்லுரியின் சாதனை!
அனைவரையும் அலுவலகப் பணியில் அமர்த்துவது.

இளைஞர்களின் சாதனை!
மன்றாடி மாத சம்பளத்தில் அமர்வது.

பெற்றோரின் சாதனை!
மனை கட்டி,மணம் முடித்து வைப்பது.

இப்படி,
சாதாராண நடைமுறைகள் சாதனைகளாக ..!
சாதனைகள் பழைய வரலாறாக ..!

Sunday, November 27, 2011

மனங்களின் மாற்றம்







பார்த்ததும் அடைய துடிப்பது,
ஆண்களின் மனம்.
பார்க்காமலே தோற்றத்தில் கவர்வது,
பெண்களின் குணம்.

அன்று பெண்களை கண்டால்
காதல் மலர்ந்தது.
இன்று பெண்களை கண்டால்
காமம் வளர்கிறது.

அன்றைய ஆண்களின் காதலில் மறைந்திருந்தது
சிறிய காமம்.
இன்றைய ஆண்களின் காமத்தில் மறைந்திருக்கிறது
சிறிய காதல்.

மாறியது,

ஆண்களின் நடைமுறையா?
பெண்களின் உடை முறையா?

அன்பின் ஆயுள்





கண்டதும் காதல் வயப்படுவது-பின்பு
கண்டதில் குறை தேடி,

அலுத்துப் போய்,
அடுத்த காதலுக்கு ஆயுத்தமாவது.

இப்படி,

அன்பிற்கும் ஆயுள் குறைகிறது
அவசர உலகத்தில்.