அறிவு
வளர்ச்சியின் அடிப்படையை
அறிவுறுத்தாத
ஆரம்பப்பள்ளியில்
'அடிபட்டு',
நல்லொழுக்க
நடைமுறைகள் நசுக்கப்பட்ட
நடுநிலைப்
பள்ளியில் 'நலிவடைந்து',
உயர்
குணங்களின் உண்மையை உணர்த்தாத
உயர்நிலைப்
பள்ளியில் 'உணர்வற்று',
மெய்யறிவு
மறைந்து போன
மேல்நிலைப்
பள்ளியில் 'மதி
மயங்கி',
கல்லூரியிலாவது
கரை சேரலாம்-என்று
கல்வி
கடன் கேட்க,
தேசிய
வங்கிக்கு சென்றால்
தேதி
சொல்லி அனுப்புகிறார்கள்.
இப்படி,
மனதளவிலும்!
பண
அளவிலும்!
என்றும்,
கரை
சேராத
கடை
நிலை மக்கள்.

No comments:
Post a Comment