மரம்
வேரை நம்பாமல்
விதைக்கிறது
விழுதுகளை-அது
தவிக்கிறது,தரையை
தொட்டால்
தாழ்ந்து
விடுவோமா-என...
முட்டி
மோதி முளைக்கிறோம்
வெட்டி
விடுவார்களா-என....
எண்ணங்களின் போர்க்களத்தில்
ஏமாற்றப்படுவோமா-என....
சந்தேக
சகதியில்
சுடாத
செங்கல்லில்
கட்டப்பட்ட
கௌரவம்,
சரித்திரம்
படைக்க நினைக்கிறது.
விட்டு
கொடுக்க முடியாத
கனவு
கோட்டை,
வெட்டி
எரியப்பட்டு,
வெளியேற்றப்படும்
உறவுகள்.

No comments:
Post a Comment