"சீர்கெட்ட சூழ்நிலையில் நல்ல பெயர் வாங்க மூயற்ச்சிக்காதே -நீயும் சீர்கெட்டு போவாய்"
"ஒருவன் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க முடியாது-ஏனெனில் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை"
"பராமரிக்கப்படவில்லை எனில்-அறிவு கூட பொட்டல்காடு தான்"
"நன்னெறிகள் சமாதி ஆனது,,,,,,,,
குற்றங்கள் சாதாரணமா ஆனது"
"நாட்டை சுரண்டுபவர்களிடத்தில் கடனாளியாக, நகரத்து அகதிகளாக, வேறு மாநிலத்தில் அடிமைகளாக, அல்லது சொந்த நிலத்தில் சமாதியாக. இந்திய விவசாயிகள்"
"காதல் அசாத்தியமானது, புத்திசாலிகள் பெரும்வீர்கள் பணக்காரர்கள் என எவரும் அதற்கு ஒரு பொருட்டே இல்லை"
"என்னாதான் தெளிவான மனதை வைத்திருந்தாலும் காலம் ஒருநாள் கலக்கி மீன் பிடிப்பதை கட்டுபடுத்த முடியவில்லை"
"முதலாளித்துவம் என்பது நிலை மாறும் வருணாசிரம தர்மமா? இல்லை
நவீன வருணாசிரம தர்மமா?"
"சந்தேகம் என்பது ஒரு சனியன்,அதை உள்ளே அனுமதித்தால் சந்தோசம் என்பது வெளியே போய்விடும்"
"விட்டுக்கொடுப்பதில் கூட தணிகை தேவை.
யாருக்கு? எதற்கு? என்று"
"தீய எண்ணம் உள்ளவனின் மன வலிமை நல்ல எண்ணம் உள்ளவனின் மன வலிமையை விட குறைவு போல! இதனால் தான் அதிகமானோர் தீய எண்ணங்களால் பாதிகபடுகிரர்களா?"
"அன்று, மனிதன் பணத்தால் சாப்பிட்டான்.....
இன்று,பணம் மனிதனை சாப்பிடுகிறது....."
"ஆண்களைக் கவரும் விசயத்திலிருந்து பெண்கள் விடுதலையாவதுதான் அவளின் சுதந்திரத்திற்கான முதல் நிபந்தனை"
"மன உழைப்பை விட உடல் உழைப்பு அதிகம்-அன்று
உடல் உழைப்பை விட மன உழைப்பு அதிகம்-இன்று"
"கேட்டவன் தன் செயலை நியாயப்படுத்துகிறான்,
நல்லவன் தன் செயலை சந்தேகப்படுகிறான்"
"குழந்தைகளுக்கு 'அன்பை' கொடுக்க கற்றுகொடுங்கள்
எதிர்பார்க்க கற்றுகொடுகாதீர்-அது
ஏமாற்றத்தையும், சுயநலத்தையும், வளர்க்கும்"
"மரபணு என்னும் மரத்தில் நாம் எல்லாம் இலைகள் போல் உதிர்வதும்,,,, துளிர்வதுமாய்,,,,"
"இந்த உலகில் மிகப்பெரிய சாதனை "உண்மையாய் இருப்பது"
""அலங்காரம்" பகுத்தறிவைவே அசைத்து பார்க்கிறது. போலிகள் அணிந்து கொண்டிருப்பதால்"
"அறியாமையை பரப்ப ஆயிரம் பேர் உள்ளனர்,அறிவை பரப்ப ஆறு பேர் கூட இல்லை"
"தீயவர்களிடமிருந்து தன்னை பாதுகாக்க கையில் கேடயம் தான் வேண்டும்.ஏனெனில் வால் அவர்களை போல் தீயவர்களாகிவிடும்"
"ஏவியவனை பாதுகாத்து, அம்புக்கு தண்டனை கொடுக்கும், நமது நீதி,
ஏனெனில்-இது வேடர்களின் ஆட்சி
எப்பொழுதும் வீழ்வது பொது மக்களே!"
"மற்றவர்களை பார்த்து நமது தவறை திருத்தி கொள்பவனே-அறிவாளி,
அவர்களை போலவே மாறுகிறவர்கள்-முட்டாள்"
"ஒருவரின் பல வகையான முகங்களையும் சலனம் இல்லாமல், சலிக்காமல், பார்த்துகொண்டு இருக்கிறது கணினி திரை"
"தன் குடும்பம் உயிர் பிளைக்க - சில வசதி படைத்தவர்களின் சுக வாழ்க்கைக்காக
உயிர் கொடுத்து உழைக்கும் - பலர்"
"அத்தியாவசிய பொருட்களுக்காக முழுவாழ்க்கையையே அடகு வைக்கும் மக்களின் உயிரையும் பறிக்க தயங்குவதில்லை சனநாயக முகமூடிக்குள் முதலாளித்துவம்"
"தனி உடமை சமுதாயத்தின் ஆணி வேர் "சுயநலம்""
"சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு,
இது வரை உள்நாட்டு கொள்ளையரிடம் ஏமாந்தோம்,
இனி வெளிநாட்டு கொள்ளையரிடம் ஏமாறப்போறோம். - விவசாயி"
"விட்டுகொடுக்கும் மனம் இருந்தால் பிடித்தவர்களிடம் பிரச்சனையை பேசி தீர், இல்லை எனில் பேசாமல் தீர்"
"என்னதான் தெளிவான மனித அறிவு இருந்தாலும்,
எல்லோருக்கும் அடிக்கடி வந்து விடுகிறது, நம் முன்னோர்களின்(குரங்கு)அறிவு"
"தான் செய்யும் தப்பை தட்டிகொடுத்து,
அடுத்தவன் செய்யும் தவறை, ஆராய்ச்சி பன்னுகிறது "மனது"
"இந்த உலகில் உண்மை எதுவென்று ஆராய்வதர்க்குள் ஆயுசு முடிஞ்சுடும் போல!!! அந்த அளவுக்கு போலிகள் ஆதிக்கம் செலுத்துகிறது"
"நிகழ்கால வாழ்கையில் பிரச்சனையை உருவாக்குவது அறிவியல்,
நிகழ்கால வாழ்கையில் பிரச்சனையை தீர்க்க விடை கொடுப்பது வரலாறு,
வளர்சிக்கு அறிவியல் வளபடுத்த வரலாறு"
"ஒரு தனி மனிதன்(அல்லது) ஒரு நிறுவனம், பல பேரின் சுதந்திரத்தை பரிப்பதுதான் தனி மனித சுதந்திரம் என்கிறது ஜனநாயகம்"
"அறிவியல்,தொழில்நுட்பம்,கல்வி,நன்னெறி,ஒழுக்கம்,உறவு,அனைத்தும் மக்களை ஏமாற்றும் கருவிகளாக உருமாற்றப்பட்டுள்ளன"
"இன்று பல பேர், முதலாளித்துவம் உருவாக்கிய சாக்கடையில் மூழ்கி உள்ளோம்,மூழ்கியவருக்கு எப்படி தெரியும் அதன் நாற்றம்"
"கண் இமைக்கும் நேரத்தில் கோடிகளை குவிபவர்களும்,நூறு ரூபாய்க்கு கண் இமை மூடாமல் உழைபவர்களும்,இந்த சமூகத்தில் தான் இருகிறார்கள்"
"சுயமரியாதை சுயரூபம் எடுக்கிறது,
விட்டுகொடுக்கும் மனம் விடைபெறுகிறது,
உறவுகள் உதிர்ந்துகொண்டு இருக்கிறது,
எல்லாம் இயல்பாய் நடக்கிறது"
"உழைக்கும் வர்கங்களின் அறிவை மட்டுபடுத்தும் கருவியா மாற்றப்பட்டுள்ளது கார்பிரடே கையில் உள்ள அறிவியல்"
"சமூகத்தை கட்டிகாப்பதும்,வளர்ச்சி அடையச்செய்வதும் தான்-"அரசியல்"
இது -"சாக்கடை அல்ல"
கட்சிகளும் ,கட்சி தலைவர்களும், கழகங்களும் தான் -"சாக்கடை "
இது -"அரசியல் அல்ல""