Monday, February 6, 2012

எங்கே போகிறோம் நாம்


வாழ்க்கை பாதையில்,
ஓட நினைத்து,
ஒதுங்க மறந்த - மனதை,
பற்றி கொண்ட பரபரப்பு,
உறக்கத்திலும் உயிருடன் உள்ளது.

உறவுகளையும் !
உடன் வந்தவர்களையும் !
பார்க்காமல் பரபரப்பு - என்னும்,
கடிவாளத்துடன் கடக்கிறது - பாதையை.

பணத்தில் புதைந்து போன - பாசம்.
அகத்தில் அழிந்து போன - அன்பு.
எல்லாம் கடமையாக காட்சியளிகின்றது.

எதற்கும் நேரம் இல்லாமல்,
எங்கே போகிறோம் நாம் ,,,,,,,,

No comments:

Post a Comment