Thursday, March 29, 2012

பறிகொடுத்த பகுத்தறிவு




மக்களின் 'உழைப்பு'
கோடி கோடிகளாக,
உள்நாட்டில் ஊழல்களாக !
வெளிநாட்டில் பதுக்கல்களாக !

உழைக்கும் 'மக்கள்'
தெருக்கோடியில்,
மாற்று துணி இல்லாமலும் !
மானங்காக்க முடியாமலும் !

இரத்தம் கொதிக்கிறது!
மானங்கெட்ட அரசியல்வாதிகளை,
பார்த்து அல்ல !!

கிரிக்கெட் சூதாட்டத்திலும்,
சமூகத்தை சீர்குலைக்கும் சினிமாவிலும்,
பொழுதுபோக்கு என்று சொல்லி,
சிந்தனையையும் !
பகுத்தறிவையும் !
பறிகொடுத்த,
என் இளைய சமூகத்தை பார்த்து.

No comments:

Post a Comment