அறிமுகம் இருந்தால் போதும்
அறிவு இல்லை என்றாலும்,
அடிமுட்டாள்களும் அரசியலுக்கு வந்துவிடலாம்.- என்ற
ஆருடத்தால் அறிமுகமாகிறார்கள்
சினிமாவின் மூலம்.
அடுத்து,
பறித்து விடுகிறார்கள்
'பகுத்தறிவை' பள்ளியிலே.!
அவிழ்த்து விடுகிறார்கள்
'அறியாமையை' அனைத்திலுமே!.
குறைகிறது பகுத்தறிவாளர் எண்ணிக்கை!
வளர்கிறது வாக்களிப்போர் எண்ணிக்கை!
பின்பு,
மூன்று மணி நேர நடிகன்,
முழு நேர நாயகன்,
முடிவடையாத நடிப்பு.........

No comments:
Post a Comment