Saturday, November 12, 2011

கல்வியின் குமுறல்



"புத்தகத்தை "
தேர்வு மையத்தில் பிரதி எடுப்பவர்களாக
கற்பவர்கள்,
வகுப்பறையில் வாசிப்பவர்களாக
கற்பிப்பவர்கள்.

"பணத்தை "
பறிகொடுக்கும் பைத்தியக்காரர்களாக
பெற்றோர்கள்,
களவாடும் கள்வர்களாக
கல்வி நிறுவனங்கள்.

"பட்டத்தை"
வாரி வழங்கும் வள்ளல்களாக
பல்கலைக்கழகங்கள்,
பண்பை குறைக்கும் பாமரர்களாக
படித்தவர்களில் பலர்.

இவ்வாறு,
கல்விக்கு சமாதி கட்டுகிறார்கள்
புதிய புதிய கட்டடங்களாக
தனியார் கல்வி நிறுவனங்கள்.

No comments:

Post a Comment