பணப் பேய்களின்,
போலி சதுரங்கக்- கட்டத்தில்
சாதாராண மக்களின் போராட்டம்.
தான் பொம்மை என்று அறியாமல்,
ராஜா என்றும்!
ராணி என்றும்!
நகருகிறார்கள் - குறுகிய கட்டத்திற்குள்.
நகர்த்துகிறார்கள் - காசு படைத்தவர்கள்.
ஆட்டுவிப்பது யார் என்று,
அறியாமல் அருகில் உள்ளவர்களிடம்,
போட்டிகளால்,
பொறாமைகளால்,
போரிடுகிறார்கள்-மாய
போர்க்களத்தில்.

No comments:
Post a Comment