நடைபாதையில் நகர்கிறது வாழ்க்கை பாதை.
சிதைந்து போன உடையில்,
மறைந்துள்ளது-சிதைய போகும் உடல்.
அரசு அரிசியில் இருக்கும்,
அரைகுறைச் சத்தையும்,
எடுத்துக்கொள்கிறது-இரவில் கொசு.
வேதனைகளைகூட தாங்க,
வலிமை இல்லாமல்,
வலிகளுடன் வாழ்கையை வழிநடத்தும்-பெண்கள்.
தனது மனைவி மக்களின்
துயரக்கண்ணீரை
துடைக்காமல் மதுவில் மூழ்கிப்போன ஆண்கள்!
இப்படி?
வதைப்படும் வாக்காளர்களின் எண்ணிக்கையை,
அதிகப்படுத்தினால் தான்!
அடுத்து ஆட்சிக்கு வரமுடியும்.
அனைவருக்கும் அனைத்தும் கொடுத்துவிட்டால்!
ஆள்வது எப்படி?

No comments:
Post a Comment